ஆன்மிகம்ஆலோசனை

ஆடி மாத முதல் வெள்ளி அம்மனை வணங்கும் முறை

பொதுவாக வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு உகந்த நாட்களாக கூறப்படுகிறது. அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கே உரிய விசேஷ மாதமாக கருதப்படுகிறது இந்த ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் அனைத்து நன்மைகளும் நமக்கு வந்து சேரும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. அம்மனுக்கு உரிய ஆடி மாதமும் அம்மனுக்கு பிடித்த வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வரும் ஆடி மாத முதல் வெள்ளி மிக மிக விசேஷம் நிறைந்த சக்தி வாய்ந்த நாளாகும், இந்த மங்கள நாளில் எவ்வாறு அம்மனை வழிபட வேண்டும் என்று பின்வருமாறு காணலாம்.

ஆடி மாத முதல் வெள்ளி

மங்களகரமான ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை அன்று நீங்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு உங்களது பூஜை அறையை சுத்தம் செய்து அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு அம்மனுக்கும் ஒவ்வொரு மலர்கள் விசேஷம் ஆகும். ஆகவே அவனுக்கு பிடித்த வாசனை மலர்களை கொண்டு அலங்காரம் செய்து பூஜை அறையை ஒரு கோவில் போல் காட்சி அளிக்கும் வண்ணம் வாசனை திரவியங்கள் பத்தி சாம்பிராணி ஆகியவற்றால் நன்றாக அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் பூஜை அறைக்கு சென்றாலே ஒரு ஆன்மீக சிந்தனை அமைதியான மனநிலை ஏற்படும் அளவிற்கு உங்கள் பூஜை அறை இருக்க வேண்டும்.

பின்பு அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து மனமுவந்து அம்மனை வழிபட்டு பயபக்தியோடு உங்கள் பிரார்த்தனையை அம்மன் வைத்து விடுங்கள். ஆடி மாத முதல் வெள்ளி என்று நீங்கள் இவ்வாறு செய்தால் அம்மனின் முழு அருளும் கிடைக்கும். அடுத்தடுத்து நீங்கள் செய்யும் காரியங்கள் நல்லதாகவே நடக்கும். அமைதியான வாழ்க்கையும் மங்களம் நிறைந்த செல்வ செழிப்பும் ஏற்படும் .அம்மன் உங்கள் வீட்டில் குடி கொள்வாள். அம்மனின் திருவருள் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

மேலும் படிக்க : ஆடி பிரதோஷத்தால் குழந்தை பாக்கியம் இதை செய்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *