ஆடி அமாவாசை தீர்க்க சுமங்கலி விரதம் – 2
முந்தைய பதிவின் தொடர்ச்சி கங்காவின் முன் சிவன் பார்வதி சமேதராய் காட்சி அளித்தனர்.பார்வதி தேவியின் காலில் விழுந்து புலம்பினாள். கங்கா தன் கணவனுக்கு உயிர் பிரிவதை விட மாட்டேன் என சூளுரைத்தாள்.
சிவன் அவளிடம் மகளே கவலைப்படாதே அழுகையை நிறுத்து உன் முன் வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய்.
இன்று ஆடி அம்மாவாசை இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாக இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான் என்றார்.
இளவரசன் அழகேசன் எழுந்தான். மகிழ்ச்சி அடைந்த இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள். கங்கா உடனே பார்வதிதேவி ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்கு தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும். என்றும் அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும். எனவும் சொல்லி மறைந்தார் பார்வதிதேவி.
ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி பயபக்தியுடன் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வேண்டி விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.
தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. உயிரோடு இருப்பவர்கள் நன்கு நீடூழி வாழ அவர்கள் பிறந்த நட்சத்திரம் அன்று அவர் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்கின்றோம். மறைந்தவர்கள் மோட்சம் அடைய அவர்கள் இறந்த திதி அன்று அவர்களுக்காக தர்ப்பணம் செய்கின்றோம்.
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரியும். மேலும் இந்த நாளில் பித்ருக்களை வழிபாடு செய்வதால் உங்களின் தீய கர்மாக்களை நீக்குகின்றது.
வாழ்வில் வளமும் , மகிழ்ச்சியும் பெறுவார்கள். வருங்கால சந்ததியினரின் வாழ்வு வளமாக இருக்கும் முன்னோர்களின் மோட்சத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும்