ஆடிஅமாவாசை சிவபார்வதி விரதம் தீர்க்க சுமங்கலி விரதம்.
அமாவாசை முந்தைய தினம் மிகவும் சிறப்பாக அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதமிருக்கும் பெண்கள் சௌமாங்கல்யம் உடன் வாழ்வார்கள் என்பது பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள்.
விரதமிருப்பது சரி அது என்ன கதை என்று கேட்கின்றீர்களா? மேலும் படிங்க. தீர்க்க சுமங்கலி விரதம் அருளும் கதை அழகாபுரி நாட்டு அரசன் கத்தலை ராஜா பராக்கிரமம் மிக்க அவருக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது.
அதைத் தீர்த்துக் கொள்ள அவன் தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அதன் பலனாக அவருக்கு ஒரு மகன் பிறந்தான். மகனுக்கு அழகேசன் என்ற பெயர் சூட்டினார். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது.
அவரது மகன் தன் இளமைப்பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்று அது சொல்லவே, மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதி வேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். மன்னன் ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்டபோது உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கொடுத்தது.
இவ்வாறாக அதன்படி இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்து போனான். இதனை அடுத்து சடலத்திற்கு பெண் கொடுக்கும் குடும்பத்திற்கு தேவையான அளவு செல்வம் தரப்படும் என்றும் மன்னன் அறிவித்தார்.
அப்போது தேவசர்மா என்பவரின் பெண் கங்காவை அவளுடைய அண்ணிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசனின் சடலத்திற்கு திருமணம் செய்து தர முன்வந்தனர். மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.
தலை குனிந்த வண்ணம் உள்ளே சென்ற கங்காவை மணவறையில் அமர வைத்தனர். அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் கூறி திருமணம் நடந்தேறியது.
ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக் கூறினார்கள். பல்லக்கு இறக்கப்படும் கண்கட்டு அவிழ்க்கப் பட்டது. தனது கணவன் அசதியின் காரணமாக உறங்குகிறான் என நினைத்துக் கொண்டாள்.
நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை எனவே அவனை மெதுவாக தொட்டு எழுப்பினாள். அவனை லேசாக அசைத்து பார்த்தாள். அவன் உயிர் அற்றவன் என்பது அப்போது தான் தெரிந்தது. தனக்கு நேர்ந்த நிலைமையை எண்ணி கதறினாள். மேலும் அடுத்த பதிவில் நாளை பார்க்கலாம்.