நம் முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அள்ளித் தரும் ஆடி அமாவாசை – 1
நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர முடியாது. ஆனால் அம்மாவாசை, மாதப்பிறப்பு, இறந்தவர்களின் உடைய திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வதிப்பார்கள். இவ்வாறு செய்யாமல் இருப்பதால் பித்ருக்கள் வருத்தப்படும் போது அது பித்ரு தோஷமாக சந்ததியினரின் ஜாதகத்தில் அமைந்துவிடும்.
இவ்வாறு பித்ரு தோஷம் ஏற்படாமல் இருப்பதற்காக இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்கு செய்கின்ற ஆராதனை நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் சூட்சும வடிவிலும், தேஜஸ் வாயு வடிவிலும், லேசான பஞ்சபூதங்களை தழுவி பரவி இருப்பார்கள். திவ்ய பித்ருக்களை போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும், பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி பட்சம், தமிழ் மாதம் அறிந்து ஒவ்வொரு தமிழ் வருடமும், அதே திதி என்று ஆங்கில தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறி வரும்.
குடும்பத்தார்கள் பின் தம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தம் ஆகும். குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். அதற்கு தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும்.
அகாலமரணம், திருமண தடை, வறுமை, கடன், வேலையில்லாத நிலை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தை, பிறப்பு, மூளை வளர்ச்சி, ஆரோக்கிய குறைபாடு, குடும்பத்தகராறு, கருக்கலைப்பு, குழந்தையின்மை போன்ற விரும்ப தகாத சம்பவங்கள் இந்தப் புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் விட்டால் இந்த சம்பவங்கள் நடைபெறும்.
குடும்ப நிம்மதியை குறைத்து விடும் என்கின்றது சாஸ்திரம். பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்திர தோஷங்கள் திகழும். தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி நிம்மதியற்ற வாழ்க்கையை தருகின்றன.