Imagesசினிமா

ஆடை நாயகியின் ஆடை அலப்பறைகள்

கொரோனா ஊரடங்கு காலத்துல இவங்களுக்கு மட்டும் எப்படி போட்டோகிராஃபர் கிடைக்கிறாங்க தெரியலை எல்லா ஹீரோயின்களும் ஒரு போட்டோ ஷூட்டை வெளியிட்டு இருக்காங்க. எது எண்ணமோங்க மக்களுக்கு நல்லா பொழுது போகுது.

ஆடை படத்துல நடிச்ச அமலா பால் வெவ்வேறு ஆடை போட்டு போட்டோ ஷூட்ட புது மாதிரியா வெளியிட்டு இருக்காங்க. ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கருத்தோடு தன்னோட இன்ஸ்டாகிராம் பேஜ்ல வெளியிட்டு இருக்காங்க.

அத்தியாயம் 1

‘தன்னுள் அடக்கியிருக்கும் மறந்துபோன சின்ன பொண்ணுக்கு காதல் கடிதம் எழுதுகிறேன்.’ கையில ஒரு பென்சிலோட கேமராவ பார்த்தா மாதிரி போஸ் கொடுத்திருக்காங்க அமலா பால்.

அத்தியாயம் 2

‘உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு நீங்களே கொண்டாட்டங்களை நடத்திக் கொள்ளுங்கள். சிறிது வாழ்ந்து பெரிது கற்றுக்கொள்ளுங்கள்.’ வீட்டிலேயே இருந்தாலும் லைட்டிங் எல்லாம் பிரமாதமா செஞ்சு பார்டி வெர் போட்டுகிட்டு ஏதோ ஒரு ஜூஸ் கப்பும் மேஜைல வச்சு பார்ல இருக்குறா மாதிரி ஒரு ஸ்டுல்லையும் உட்கார்ந்து சூப்பரா போஸ் கொடுத்து இருக்காங்க அமலா பால்.

அத்தியாயம் 3

‘பலமுறை எந்தவித மேக்கப்பும் இல்லாமல் மூன்று வித கோட்டிங்கும் இல்லாமல் நாம் நாமாக இருக்கும் காலம் உண்டு. அப்படி ஒரு தினத்தில் கண்விழித்தேன். இந்த படப்பிடிப்பை ரத்து செய்யலாம் என்றும் எண்ணினேன். ஆனால் நான் நானாக இருக்கும் புகைப்படமும் வேண்டுமல்லவா! என்னிடம் மறைப்பதற்கும் ஒன்றும் அல்ல இது மாறுவேடமும் அல்ல. உண்மையாக வாழ்க்கையை வாழும் ஒரு உண்மையான பெண் நான்.’ வீட்டில் இருக்கும் பொழுது எந்த ஒரு பெண்ணும் சாதாரண ஆடையை அணிந்த இருப்பாள். அதே வண்ணம் காட்சியளிக்கும் அமலா பால்.

அத்தியாயம் 4

‘உயரத்தை அடைய பல வளைவுகளும் பல நெளிவுகளும் லட்சக்கணக்கான படிகளும் ஆயிரம் மையில் பாதையும் இருக்கலாம். அந்த உயரமான மாளிகை நொறுங்கி சுக்குநூறாகி கீழே விழும் பொழுது ஏன் அடித்தளமாக இருப்பது முக்கியம் என நம் அம்மாவின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும். நாம் அந்த அடித்தளத்தில் இருக்கும் நிலைக்கு வந்தால் நமக்கு ஒரே ஒரு வழிதான் முன்னேறுவது மட்டும்தான்.’ மரக்கட்டையில் காலை நீட்டி உயரத்தை பார்ப்பது போல் போஸ் கொடுத்திருக்கும் அமலா பால்.

அத்தியாயம் 5

‘வாழ்க்கையின் உண்மையான அமைதியை பெற உன்னுள் இருக்கும் குழந்தை தனத்தை விட்டுக்கொடுக்காமல் எப்பொழுதும் மென்மையாக தயையுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழலாம். ஒருவரையும் அந்தக் குழந்தையை உன்னிடமிருந்து பற்றிச் செல்ல விடாதே.’ குறும்புத்தனத்துடன் புத்தகங்களுடன் காட்சியளிக்கும் அமலா பால்.

இவ்வாறு ஐந்து அத்தியாயங்களை “காட்டுதனமான பெரிய கனவு: ஒரு புகைப்படக் கதை” எனும் தலைப்பில் அட்டகாசமாக அமர்க்களமாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அமலா பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *