செய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்விழிப்புணர்வு

இத்தனை வருடமாக பட்டாசு வெடிக்காத கிராமமா.. தீபாவளி திருநாளை வித்தியாசமாக கொண்டாடும் கிராமம்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் சுற்றுச்சூழலுக்கும் பறவைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதாக கிராம மக்கள் பேட்டி

இந்த வருடம் நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை மிக கோலாகலமாக அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறை என்பதால் அனைவரும் அவரவர்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாடை அணிவது, கோவிலுக்கு செல்வது, பலகாரங்கள் சாப்பிடுவது, அனைவருக்கும் பகிர்வது என பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடினர். தீபாவளி என்றால் நம் அனைவரின் நினைவிற்கு உடனே வருவது புத்தாடையும் பட்டாசும் தான். அதுவும் இந்த வருடம் புதுவிதமான பட்டாசுகள் வித்தியாசமான முறையில் பட்டாசு கடைகளில் விற்பனை செய்தனர். 2023 ஆம் ஆண்டிற்கு என ஸ்பெஷல் பட்டாசுகளை இந்த வருடம் இறக்கினர். எனவே மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் புது புது பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். எங்கு பார்த்தாலும் பட்டாசு சத்தம் ஒளிர பண்டிகை இனிதே முடிந்தது.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அரசு. ஆனால் அதன்படி யாரும் வெடிக்கவில்லை வருடத்திற்கு ஒரு நாள் வரும் பண்டிகை என்று அரசின் அறிவிப்பை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ந்து வந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அருகே கிட்டாம்பாளையம் கிராமத்தில் பட்டாசு வெடிப்பதற்கு மாறாக அனைவரும் பட்டாசு வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். பண்டிகை என்பது நமக்கு மட்டுமல்ல பறவைகள் விலங்குகளுக்கும் கூடத்தான் அவைகளை துன்புறுத்தாமல் பண்டிகையை கொண்டாடுவதே சரியான முறை என்று கூறி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்த கிராமத்தில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கிராமத்தில் யாருமே பட்டாசு வெடிப்பதை இல்லையாம். இவ்வாறு பல கிராமங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம்

ஆனால் மக்கள் அதிகமாக கூடும் நம்ம கோவையில் பட்டாசு வெடிக்காத கிராமம் என்றால் அது ஒரு போற்றத்தக்க விஷயம் தான். பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்த 20 வருடங்களாக நாங்கள் அனைவரும் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகை நீங்கள் அனைவரும் கொண்டாடுவதை விட நாங்கள் மிக அதிக சந்தோஷத்துடன் சுற்றுச்சூழலையும் பறவைகளையும் துன்புறுத்தாமல் கொண்டாடுகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம் என கிட்டாம்பாளையம் கிராம மக்கள் பேட்டி அளித்து உள்ளனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது அனைவரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதர்களை பார்ப்பது சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு ஒவ்வொருவரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடினால் சுற்றுச்சூழலையும் விலங்குகளையும் பாதிக்காமல் அனைவரும் பண்டிகையை கொண்டாடலாம் என ஒருவருக்கொருவர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *