தன் பாரத்தை இறக்கி வைக்க விரும்பாத 92 வயது முதியவர் பெண்கள் பார்த்தா அசந்து போவிங்க
இன்றைய கால கட்டத்தில் அநேக பெண்களுக்கு மிகப் பெரிய கவலை. முடி கொட்டும் பிரச்சனை இருக்கும். முடியை பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர் பலரும். ஆனால் முடிக்கும், இறப்புக்கும் உள்ள தொடர்பை நம்பும் ஒருவர். தன் முடியை வெட்டாமல் 80 வருடங்களாக வளர்த்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாங்க. 5 மீட்டர் அளவு வளர்த்த தலைமுடியை அதிசயக்க வைக்கும் 92 வயது முதியவர் இவர்.
வியட்நாமை சேர்ந்த 92 வயதான ஞுயேன் வான் சியென் என்ற நபர் 80 வருடங்களாக தனது தலை முடியை வெட்டாமல் வளர்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். 5 மீட்டர் நீளம் கொண்ட இந்த முடியை பார்த்து பெருமிதம் கொள்கிறார். தன் தலைமுடியை வெட்டி விட்டால் தான் இறந்து விடுவோம் என அவர் நம்புகிறார். தான் எதையும் மாற்றத் துணியவில்லை என்றும் இதுவரை தலையை சீவியது கூட இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஹோசிமின் நகரத்திலிருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இவர் வசித்து வருகிறார். இந்த முடியை தான் கவனமாக பார்த்துக் கொள்வதாகவும் ஒரு துணியில் மூடி உலர்த்தி சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பதாக இவர் கூறுகிறார். தலைமுடி கருமையாக அடர்த்தியாக வலிமையாக இருந்திருக்கிறது. இதை மென்மையாக்க சீவி விட்டிருக்கிறார்.
தலை முடியை தொட்ட போது ஒரே இரவில் மிகவும் கடினம் ஆகிவிட்டதாகவும் உடன் இணைந்து இதற்கு சொந்தமாகி விட்டதாகவும் கூறுகின்றார். முதியவர் தனது தலை முடி தொடர்ந்து வளரும் என்பதை உறுதியாக நம்புகிறார். ஒரு ஆரஞ்சு நிற தலைப்பாகை கொண்டு முடியை கட்டி வைத்திருக்கிறார். இவர் பள்ளியில் படிக்கும் போதே முடியை வெட்ட வற்புறுத்திருக்கிறார்கள்.
மூன்றாம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கு செல்லாததால் இதன் பிறகு சீவவோ, வெட்டவோ அல்லது தலையை கழுவவோ கூடாது என்று முடிவு செய்தார். வெறும் தேங்காய் எண்ணெயை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்துகிறார். ஒரு முறை தனது தலைமுடியை சர மூலம் இணைக்க முயற்சித்த நபர் ஒருவர் இறந்து விட்டதாக கூறுகிறார்.
முடிக்கும், இறப்புக்கும் உள்ள தொடர்பையும் இவர் நம்புகிறார். பார்ப்பதற்கு எளிமையாக தெரிந்தாலும் புனிதமானவை என்று குறிப்பிடுகிறார். பார்க்கவே அதிசயக்கத்தக்க முடியை பார்த்தாலே பெண்கள் தலை சுற்றி விழுவார்கள். அப்படியிருக்க எப்படி இந்த வயதிலும் பராமரிக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை.