Job opportunity 2023: பத்தாம் வகுப்பு முடித்தால் போதும் வங்கியில் ரூ.20,000 சம்பளத்தில் வேலை
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB Bank) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைந்துள்ள Sneha Trust-ல் காலியாக உள்ள Faculty, Office Assistant, Attender பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலிப்ணியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் Sneha Trust இல் Faculty பதவிக்கு 01 பணியிடமும், Office Assistant பதவிக்கு 03 பணியிடங்களும், Attender பதவிக்கு 01 பணியிடமும் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வி தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Faculty – Graduate Degree, Post Graduate Degree, MSW, MA, B.Sc, BA, B.Ed
- Office Assistant – Graduate Degree
- Attender – 10ம் வகுப்பு
வயது வரம்பு
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள காலி பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 ஆக இருக்க வேண்டும் அதிகபட்ச வயதானது 40 ஆக இருக்க வேண்டும்.
சம்பளம்
- Faculty பணிக்கு ரூ.20,000/- என்றும்,
- Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
- Attender பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Personal Interview, Demonstration / Presentation ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ இணையதளம்