காய்கறியில் ஒரு பூ வகை அது என்ன..???
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… என்ற பாடல் வரி தான் நியாபகம் வருகிறது. காய்கறியில் இரண்டு வகையான பூ வகை காய்கறி உள்ளன. ஒன்னு வாழை பூ, இன்னோன்று காலிபிளவர். காய்களில் மலர்ச்சியை தரும் இந்த காலிபிளவர் பற்றி தெரிஞ்சுக்கலாமா.. அடுத்த பதிவில் இன்னோரு பூ வகையை சேர்ந்த வாழை பூ பற்றி பதிவிடுறேன்.
மலர்ச்சியை தரும் இந்த காலிபிளவர்
காலிபிளவர், கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகு தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில், காலிபிளவர் முக்கிய பங்காற்றுகிறது. கீழ்வாதம், முடக்கு வாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்தாகும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உன்னதமான இதய ஊட்டச்சத்தாக உள்ளது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் கொண்டது.
இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் கே, இ, பி, ஏ சாது அதிகம் உள்ளது. 100 கிராம் காலிபிளவர் தினமும் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். சிறுநீர் பெருக்கி, அடிபட்ட இடத்தில ரத்தம் சேர்ந்த வீக்கம், ரத்த கசிவு இருந்தால் இத சாப்பிட சரியாகும். காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகு பொடி ஒரு டம்பளர் நீரில் கொதி விட்டு பருக சரியாகும்.
உடல் இளைத்தவர்களுக்கு இது சத்துமிக்கது. சூட்டை தனித்து, மூலத்தை கட்டுப்படுத்தி, மலச்சிக்கலை போக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால், ஜீரண சக்தியை அதிகரிக்கும். அல்சர், குடல் புற்று நோயை தடுக்கும். புற்று நோய் செல்களை கட்டுப்படுத்தும். இதை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வதால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மன அழுத்தம், இருதய நோய் கட்டுப்படும்.
பூகோஸ்
பீட்டா கரோட்டின், மாங்கனீஸ், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், மாவுசத்து, கால்சியம், சோடியம்,புரதம், உயிர்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளன. வாரம் இருமுறை உட்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் நலம் சீராகும். பார்வைக்கு தேவையான கரோட்டின் உள்ளது. பூகோஸ் என்றழைக்கப்படும் காலிபிளவர் உடலில் உள்ள நோயை அளிக்க கூடிய அறிய மருத்துவ குணத்தை பெற்றுள்ளது. மலை மாவட்டங்களில் இது அதிகமாக விளைவிக்கபடும் காய்கறிகளில் ஒன்றாகும்.