காய்கறியில் இன்னொரு பூ வகை அது என்ன..???
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… என்ற பாடல் வரி தான் நியாபகம் வருகிறது. காய்கறியில் இரண்டு வகையான பூ வகையில் காய்கறிகள் உள்ளன. ஒன்னு வாழை பூ, இன்னோன்று காலிபிளவர். காய்களில் மலர்ச்சியை தரும் காலிபிளவர் பற்றி போன பதிவில் தெருஞ்சுகிட்டீங்க.. இந்த பதிவில் இன்னோரு பூ வகையை சேர்ந்த வாழை பூ பற்றி பதிவிடுறேன்.
வாய் புண்
எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருப்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து பாடாய் படுத்தும். வாய்ப்புண் தானே என்று அலட்சியமாக இருக்க கூடாது. சில நேரங்களில் உணவு பழக்கங்கள் மூலமாக புண் சரியாகிவிட்டால் பரவாயில்லை. அதே வாய் புண் தொடர்ந்து வந்தால், அது புற்று நோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறதாம். அதனால் அலட்சியமாக இல்லாமல் டாக்டரை பார்ப்பது நலம்.
வாழை பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது வாய்ப்புண் வயிற்று புண் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி குறைவால் இந்த வாய்ப்புண் வரும். வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பதால், ஆரஞ்சு உணவில் சேர்ப்பதால் இதை தடுக்க முடியும். இவர்கள் இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது. இறைச்சி சாப்பிட அமில தன்மையை உடலில் அதிகமாக்கி, வாய் புண் ஆற விடாமல் செய்து விடும். தினமும் காலை மஞ்சள், புதினா சாறு தடவி வர புண் ஆறும்.
வயிற்று புண்
கொய்யா இலை சாறை பருக வாய்ப்புண் குணமாகும். சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். புளிப்பு சுவை உடைய தயிர், மோரு, உணவில் சேர்த்து கொள்ளலாம். துளசி இலையை கழுவி மென்று சாப்பிடலாம். அதிகமான காரம் சேர்த்து கொள்வாய் தவிர்க்கவும். வாழைப்பழத்துடன், தயிர் சேர்த்து காலை உணவாக உட்கொண்டால் அன்று முழுதும் வாய்ப்புண் எரிச்சல் கட்டுப்படும்.
கூரான பற்களை சரி செய்ய வேண்டும். வாயை எப்போதும் சுத்தமாக வைக்க மௌத் வாஷ் செய்யவேண்டும். ஆறு மாதம் ஒரு முறை பல் டாக்டரை பார்த்து ஸ்கேலிங் செய்து கொள்ளவும். மாதுளை தோல், மஞ்சள், உப்பு எதோ ஒன்றை கலந்த நீரில் தினமும் மௌத் வாஷ் செய்யலாம். வாய்ப்பகுதி அதிக மென்மையாவதால் வெளிப்படும் நரம்பு பகுதியே வாய்ப்புண் ஆகும். இரைப்பையில் புண் இருந்தாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால், இதன் தாக்கம் அதிகம் ஆகும்.
சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் வாய்புண் வரும். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும். சாப்பிடும் போது, பேசும் போது இதன் வலி அதிகம் ஆகும். வெண்ணெய், நல்லெண்ணெய் தடவலாம். மிளகுதக்காளி கீரை சாறை தடவலாம். ஆரம்பத்தில், உதடு, கன்னம், நாக்கு கடுகளவு கொப்புளங்கள் ஆரம்பித்து போக போக பெரிதாகவோ, உடைந்தோ குழியை ஏற்படுத்தவோ கூடும்.
இதன் வலி தொண்டை கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் உடல் வலி, தலைவலி என தொல்லைகள் தொடரும். வாய் புண்ணால் துர்நாற்றம் வரும். இதை கவனிக்காமல் விட்டால் மான பிரச்னையாகும். நண்பர்கள், உறவினர்களை விட்டு தள்ளி நிற்க வைத்துவிடும். வாய்ப்புண் மற்றவர்களிடம் முகம் சுளிக்க வைத்துவிடும். ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வாரம் தவறாமல், வாழை பூ எடுத்து கொள்ள இந்த நோயை விரட்ட முடியும்.