101 ஆடுகள் …தடபுடல் விருந்து…
அசாதுதின் ஒவைசி நீண்ட நாட்கள் நலமுடன் வாழ வேண்டும் என தொழிலதிபர் ஒருவர் 101 ஆடுகளை பலியிட்டு தடபுடலாக விருந்து வைத்துள்ளார் .
ஹைதராபாத்தை மையமாக கொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைசி கடந்த உத்திரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய போது மீரட் அருகே அவரை சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யும் நோக்கத்திலையே அவரை சுட்டதாக வெளிப்படையாக தெரிவித்தனர். இது தொடர்பாக இன்று மக்களவையில் விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒவைசிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முன் வந்ததாகவும், ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
எம்பி ஒவைசி கூறியதாவது காந்தியை கொல்ல முயன்றவர்கள் தான் என்னையும் கொல்ல முயன்றதாகவும், கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனையடுத்து ஒவைசியின் ஆதரவாளர்கள், அவர் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும் என நாடு முழுவதும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அதன்படி ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 101 ஆடுகளை பலியிட்டு விருந்து வைத்துள்ளார். இதில் ஒவைசி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உத்திரபிரதேச தேர்தல் ஒவைசி கட்சி முதல் முதலாக போட்டியிடுகிறது. இந்நிலையில் ஒவைசியால் பாஜக ஓட்டுக்கள் சிதையாது என்றும் மாறாக இது அகிலேஷ் யாதவ் கட்சிக்கு தான் இழப்பு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.