இந்திய தேசத்தின் மாணவர்கள் வழிகாட்டி திரு கலாம் நினைவுநாள்!
இந்திய தேசத்தின் புதியதொரு அடையாளமாக இருந்தவர்.காந்திக்குப் பின் நாட்டு மக்களால் பெருமளவில் மதிக்கப்பட்டவர் எதிர்ப்பாளர்கள் இல்லாதவர்கள் மாணவர்களின் கையில் எதிர்காலம் இருக்கின்றது. என் மதிப்புக்கு உரியவர் கனவு காணுங்கள் என்று நம்மை இலக்கை நோக்கி ஓட வைத்தவர். தடைகளை தகர்த்தெறிய கற்றுக்கொடுத்தவர் போராட்டங்களை விரும்பி ஏற்க வைத்தவர். இவர் என்றும் நம்முள் இருப்பவர் இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்று நினைக்கையில் உள்ள ஆரோடும் பொங்குகிறது.
இந்தத் தேசத்தின் மிகப்பெரும் உறுதி வாய்ந்த மனிதரும் மனிதர்களில் இவரும் ஒருவராவார் இந்திய விண்வெளி என் தந்தை என்று அழைக்கப்படுகிறார். கனவு உன்னைத் தூங்க விடாது இலக்கை நோக்கி ஓட வைக்கும் என்று லட்சியத்தை மூச்சாகக் கொண்டு வாழக் கற்றுக் கொடுத்தவர். இந்தியாவின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த லட்சியவாதி டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள் இந்தத் தேசத்தின் ஒவ்வொரு இந்தியனும் வாழும் ஆத்மாவாக இருக்கின்றார்.

அவர் விதைத்த விதையானது வெற்றி பெறும் ஒவ்வொரு இதயத்திலும் இருக்கின்றது. இந்தத் தேசத்தில் இதை விட ஒரு சிறந்த மனிதரைக் காண முடியுமா என்பது தெரியவில்லை. இவர் சிறந்தவர் இதெல்லாம் சிறந்தவர் விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு பேச்சாளர் மாணவர்களின் வழிகாட்டி என்ற பன்முகமாக இருந்தவர். குழந்தைகள் மாணவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவித்துத் திறம்பட செயல்படும் காரணமாக இருந்தவர். ஆபெஜெ அப்துல் கலாம் தான் பயணம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களைக் காண வேண்டுமென்று புதுவேகம் உடன் இருந்தவர்.
முயற்சி ஒன்றே வாழ்வின் அலட்சியமாக இருக்க வேண்டும். முயற்சி என்பதனை முழுமூச்சாய் பின்பற்ற வேண்டும். இதைக் கற்றுக் கொடுத்தவர் டாக்டர் திரு ஏபிஜே அப்துல் கலாம் ஆவார் இந்தியாவை இளைஞர்கள் கையில் கொடுத்துத் தேசத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கின்றது என்று சொல்லிச் சென்றார். இந்த நாட்டில் இருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் வல்லரசு கனவைக் கொடுத்தவர். அப்துல் கலாம் ஆவார் 2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கனவை நம்முள் விதைத்தவர்.
இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதியவர் இந்தியா அறிவியலில் வல்லரசு நாடாகும். உயர்ந்த நல்லரசு நாடாகவும் மாறவேண்டும் என்பதை வலியுறுத்தித் திட்டத்தை வகுத்துக் கொடுத்தவர். 2020ஆம் ஆண்டுக் கனவை இந்திய நினைவாக்கும் என்று விதை விதைத்துச் சென்றவர். ஏவுகணை நாயகன் இளைஞர்களின் வழிகாட்டித் தனது 83 ஆவது வயதில் ஜூலை 27 இந்திய இளைஞர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் ஆள சென்றார்.

இந்தியா ஒவ்வொரு நாளும் பொழுதும் வளர்ந்து கொண்டு செல்கின்றது என்றால் அது திரு அப்துல் கலாம் அவர்கள் விதைத்துதான், அவரை எண்ணி அவரது வார்த்தையை மந்திரமாக எண்ணி அவரை வழிகாட்டியாகக் கொண்டு இந்தத் தேசத்தை ஆள ஒரு பெரும் இளைஞர் கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. அந்த இளைஞர்கள் கூட்டம் வெகுவிரைவில் வெளிவரும். அப்போது இந்தத் தேசம் மாபெரும் தேசமாக மக்கள் முன் நிற்கும் அன்று இந்த மக்கள் ஆர்ப்பரித்துப் போவார்கள். அதுவரை திரு அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலால் விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் என்ற மாணவர் கூட்டங்கள் சூளுரைத்துக் கொண்டிருக்கின்றன. இவர் இல்லாத நாள் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலான தருணம்தான் ஆனால் எங்கிருந்தாலும் இந்தத் தேசத்தை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வதில் அவருக்கு நிகர் அவர்தான் வாழ்க பாரதம் வளர்க நம்தேசம்.