காக்டெய்ல் ஹீரோவுக்கு ஹாப்பி பர்த்டே
நடிகர் யோகிபாபுக்கு ஹாப்பி பர்த்டே சொன்னவுடனே கோலமாவு கோகிலா சீன்தாங்க ஞாபகம் வருது அவரா வாலண்டியரா போய் கைகொடுத்து ஹாப்பி பர்த்டேனு கேட்டு வாங்கிப்பாரு நம்ம லேடீ சூப்பர் ஸ்டார் கிட்டேருந்து கேட்டு வாங்கிருப்பாரு.
திரை உலகம்
பாபு யோகி பாபு!

22 ஜூலை 1985ல பாபுவாக பிறந்த இவரு சின்னத்திரையில் லொள்ளு சபால தன்னோட பயணத்தை ஆரம்பிச்சாரு. ஜாக்பாட் படத்துல இவரோட உடல்வாகை முக லட்சணம் அப்படின்னு எல்லாத்தையும் தன்ன பத்தி இவரே கலாய்ச்சு இருப்பாரு. ஆனா அதுதாங்க இவரோட பிளஸ் பாயிண்ட்டாவே இருந்துது.
இயக்குனர் ராம் பாலாவ யார் இந்த பையன் அப்படின்னு திரும்பிப் பார்க்க வச்சாரு நம்ம பாபு. ராம் பாலா பாபு கிட்ட பேசி இவர பத்தி நல்லா தெரிஞ்சு கிட்டு திரையுலக பயணத்தில் ஒரு வழிகாட்டியாக இருந்தாரு. ரெண்டு வருஷம் ஜூனியர் ஆர்டிஸ்ட் உதவி இயக்குனர் என பல வேலைகளை பார்த்து இருக்காரு பாபு.
2009 ல இயக்குனர் அமீரோட யோகி படத்தில் களமிறங்கிய இவருக்கு யோகி பாபு என்ற பெயர் வந்துச்சுங்க. அதோட இவருக்கு நல்ல காலம் பொறந்திருச்சின்னு சொல்லலாம். தொடர்ந்து இவரோட நகைச்சுவை பயணம் சூப்பரா இருந்துச்சு.

பையா தில்லாலங்கடி கலகலப்பு வீரம் மான் கராத்தே அரண்மனை யாமிருக்க பயமேன் காக்கி சட்டை காக்கா முட்டை ஜாக்சன் துரை ஆண்டவன் கட்டளை ரெமோ கட்டப்பாவ காணோம் தானா சேர்ந்த கூட்டம் ஜூங்கா பரியேறும் பெருமாள் விசுவாசம் தடம் ஜாக்பாட் கோமாளி நம்ம வீட்டு பிள்ளை தர்பார் காக்டைல் இப்படிப்பட்ட படங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம். ஷாருக்கானோட சென்னை எக்ஸ்பிரஸ் படத்துலையும் நடிச்சிருக்காரு.
கதாநாயகர்களுக்கு கதாநாயகிகளோட நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். ஆனால் நகைச்சுவை நாயகர்கள் கூடையும் ஒரு நல்ல வேவ்லெண்த் இருந்தா தான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகுது. அந்த வகையில யோகிபாபு எல்லா நடிகர் நடிகைகளுடனும் இணைந்து சூப்பரான வேவ்லெண்த் மீட் பண்ணி செமைய கலாய்ச்சு மக்கள சிரிக்க வைக்கிறாரு. நகைச்சுவை நாயகனாக மட்டுமல்லாமல் கதாநாயகனா பல படத்துல கலக்க ஆரம்பிச்சுட்டாரு.
இவரோட வெளிவர போகும் படப் பட்டியல் பெருசு ஆயிட்டே போகுது. ஆகஸ்ட் 1 ஜி5 வெளிவர இருக்கும் இடத்திலேயே அவர் நடிச்சிருக்காரு. சந்தானத்தோட டகால்டி வைபவோட டாணா என பல படங்கள் நடிக்கும் இவருக்கு டூயல் ரோல் வர படம் டக்கர். பல படங்கள் படம் பிடிப்பு முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நிலையில இருக்கு பல படங்கள் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கு இப்படி இவரோட திரையுலகப் பயணம் சக்சஸஸ்ஃபுல்லா இருக்கு.

திருமணம்
5 பிப்ரவரி 2020 இவருக்கு திருமணம் ஆச்சு. யோகி பாபு-மஞ்சு பார்கவி திருமணம் பழமைம்பெரும் கோவிலான திருத்தணியில் இந்த வருடத்தோடு இரண்டாவது மாசத்திலே சூப்பரா ஜோரா நடந்தது.
புது மாப்பிள்ளைக்கு இது முதல் பிறந்தநாள்; மக்களே உங்களோட விஷ்சை சொல்லிடுங்க. யோகி பாபுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.