+2 பொதுத்தேர்வு திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சி முதலிடம்
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற பொதுத்தேர்வு அடுத்து அவர்களுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மார்ச் மாதம் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
சுமார் 8 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு எழுதியுள்ளனர். 92 சதவீத தேர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. மாணவர்கள் 89.41% மாணவிகள் 94% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் பலர் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சி பெற்று தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக தேர்வு பெற்று உள்ளது.
இரண்டாம் இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்று 96.99% தேர்ச்சியை விட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சுமார் 2 ,120 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்று அதிரடியாக அசத்தியுள்ளனர்.
மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.
மாணவ, மாணவிகள் tnresults.nic.in என்ற இணையதளம் மூலமாக தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் SMS மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு எழுதிய பலர் நல்ல முறையில் தேர்வு பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விடாமல் தடுத்து நிறுத்தியது.
இதனையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வெற்றிகரமாக தமிழக அரசு முடித்தது. ஊரடங்கு காரணமாக வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் தேங்கிக் கிடந்தன.

அதயும் வெற்றிகரமாக முடித்து இன்று மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதத்தையும் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் தங்கள் உயர்கல்வி படிப்பை தொடர இந்த ஆண்டு அவர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
இது மேலும் அவர்களுக்கு உயர்கல்வி படிக்க என்ன படிக்கிற வேண்டுமென்கிற முடிவெடுக்க இந்த ஊரடங்கு காலம் சாதகமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.