வைரலாகும் பானிபூரி ஏடிஎம் வீடியோ….
கொரோனா ஊரடங்கு காரணமாக நம்மில் பலருடைய ஃபேவரிட் உணவான பானிபூரி சுவைக்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வந்து இருந்தோம்.
எப்பொழுது வெளியே சென்றாலும் நாம் ரோட்டு கடைகளில் முக்கியமாக சுவைக்கும் உணவாக பானிபூரி முதல் வரிசையில் இருந்தது.

பலரும் இதன் தயாரிப்பு முறை குறித்து கேலி கிண்டல் செய்த நம்மை முகம் சுளிக்க வைத்தாலும் நம்மில் பலர் இந்த பானிபூரி விட்டுக் கொடுத்ததில்லை.
இந்த கொரோனாவின் ஊரடங்கு காரணமாக நம்மில் பலர் பானிபூரி சுவைக்க முடியாமல் யூடியூபில் பார்த்து தானே செய்கிறேன் என்று கூறி சொதப்பி எப்படியோ ஒரு வழியாக செய்து அதன் ஒரிஜினல் சுவை வரவில்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு வந்ததாக நினைத்து நம்மை சமாதானம் செய்துகொண்டு அதனை சாப்பிட்டு வந்தோம்.
மேலும் தற்போது ஆங்காங்கே சில கடைகள் மட்டும் திறந்த போது நம்மில் பலருக்கு நோய்த்தொற்று அச்சம் காரணமாக அதனை சுவைக்க தயக்கம் காட்டி வந்தோம்.

இந்நிலையில் குஜராத் இளைஞர் ஒருவர் பானிபூரி ஏடிஎம் ஒன்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தான் இந்த பானிபூரி ஏடிஎம் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த இயந்திரத்தின் மூலம் தரமான பானிபூரி கிடைப்பதாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
written by Srimathi