தமிழகத்தில் ஜூலை 31 வரை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழக அரசு மேலும் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு -ல் தமிழகத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளே இருக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லாக்டோன் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நகரங்களுக்கு இடயே செல்ல இ-பாஸ் தேவையில்லை.
மாநிலத்திலிருந்து வெளியே செல்ல அவசியம் இ-பாஸ் தேவை. மாநிலத்திற்கு உள்ளே வெளி மாநிலத்திலிருந்து வருவதற்கும் இ- பாஸ் கட்டாயம் தேவை.
சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 6 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சலூன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த ஜூலை 6ம் தேதி முதல் அனுமதியுள்ளது. மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24ஆம் தேதிக்கு முன்னர் இருந்த கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் தொடரும். முழு முடக்கம் உள்ள இடங்களில் ஜூன் 30 வரை வழங்கப்பட்ட ஜூலை 5 வரை இ-பாஸ் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத்தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தொடர்ந்து தடைவிதித்துள்ளது. மாவட்டங்களுக்கு இடையே சென்று வழிபாடு முறை தொடர்ந்து இ-பாஸ் அமலில் இருக்கும் என அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தொடர்புகளும் இன்றி முழு முடக்கம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளன. ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.