ராகுல் ப்ரீத் சிங் அயலான் படத்திலிருந்து விலகுகிறாரா?
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த வெற்றி நாயகன். பல படங்கள் நடித்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக தான் பலருக்கு இவர் அறியப்படுகிறார்.
சிவகார்த்திகேயன்
காமெடியனாக பலகுரல் மன்னனாக அறிமுகமாகிய இவர் டிவி ஷோக்களில் ஆங்கராக பணியாற்ற தொடங்கினார். தமிழ் பேச்சுத் திறன் வார்த்தை விளையாட்டு போன்ற வாய் வித்தை பெற்ற கற்ற கலைஞராக திகழ்ந்தார்.

குழந்தைகளுக்கு உற்சாகம் மகிழ்ச்சி தரக்கூடிய கதாநாயகனாக சிவகார்த்திகேயன் திரையுலகில் தடம் பதித்தார். சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன் வரும் நகைச்சுவைக் காட்சிகள் பட்டிதொட்டி தோறும் பாராட்டுகள் பெற்றது.
சூரியை அண்ணன் என்ற உறவு கொண்டு தான் அழைப்பேன் என்று சமீபத்தில் பேட்டியளித்தார் சிவகார்த்திகேயன். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அந்த செட்டில் இருப்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பதையும் அப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் ப்ரீத் சிங்
கல்லூரி வாழ்க்கையின்போதே மாடலிங் தொழிலை மேற்கொண்டவர் ராகுல் ப்ரீத் சிங். இளையதளபதி விஜய் நடித்த கில்லி படம் கன்னட மொழியில் இயக்கப்பட்டு அதில் கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் முதல் முறையாக திரைஉலகில் களமிறங்கினார். இந்தப்படம் 2009இல் வெளிவர அதனைத் தொடர்ந்து பல படங்கள் பல மொழிகளில் நடித்து வரலானார்.

2017 தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலமாக மிகுந்த பிரபலமான நடிகையாக ரசிகர்களிடையே தமிழ் திரை உலகில் தென்பட்டார். அதனைத் தொடர்ந்து தேவ் மற்றும் என்ஜிகே போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்தது.
அயலான்
சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும் இயக்கப்படும் படமே அயலான். அறிவியல் சார்ந்த கதை கரு கொண்ட படம் அயலான்.
75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அயலான் படம் இருக்க தற்போது ராகுல் ப்ரீத் சிங் இந்த படத்தில் இருந்து விலகப் போவதாக ஒரு செய்தி பரவி வந்துள்ளது.
அது வெறும் வதந்தியே.
‘நான் அவ்வாறு எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அயலான் படத்தில் இருந்து நான் விலகவில்லை. இதைப்போன்ற வதந்திகளை நம்பாதீர்கள்’ என விளக்கம் அளித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங்.
‘ஏன்மா இப்படி படுத்துகிறீர்களேமா!’
சிவகார்த்திகேயன் டயலாக் போன்றே இந்த வதந்தியும் உள்ளது.