கொரோனா தொற்று குணமாகி 58% வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அதிகரித்துவரும் கோரதாண்டவம் மக்களை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நாட்டில் உற்பத்தி முடங்கிப்போய் உள்ளது. சாமானிய வாழ்க்கை சரிந்து போய் காணப்படுகின்றது.

அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மக்கள் சிகிச்சை பெற்று இதுவரை இந்தியாவில் 58 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர், என்பதை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் இந்த தகவலை ஹர்ஷவர்தன் அவர்கள் தெரிவித்தார். இதுவரை நாட்டில் கொரோனாவினால் பாதிப்படைந்தவர்கள் 58 சதவீதத்தினர் குணமாகி உள்ளனர் என்ற தகவலை உறுதி செய்தார்.
இந்தியாவில் மூன்று லட்சம் பேர், கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்தியாவின் கொற்று விகிதம் குறைந்து காணப்படுவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
ஆனால் இது உண்மையா எந்த அளவிற்கு உண்மை என்பது அரசுக்கே வெளிச்சம். இந்தியாவில் மட்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரிய அளவில் பாதித்துள்ளது, தலைநகர் டெல்லி அடுத்தது சென்னை என்று நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.
இது மிகுந்த சவால் நிறைந்த காலம் இதனை கட்டுக்கோப்பாக கையாள வேண்டியது நமது கடமை. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். உடற்பயிற்சி ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
உலக அளவில் கொரோனா வைரஸினால் 85 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கொரோன வைரஸ் பாதிப்படைந்த மக்களில் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த உலக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இங்கு பல்வேறு வாழ்க்கை முறை உணவு இடமுள்ளது.
இந்தியாவின் இதுபோன்ற சிக்கல்கள் குறைய வேண்டும் என்று அரசும், மக்களும் பல்வேறு முறைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதை முழுமையாக குறையும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்று தகவல்கள் கிடைத்து வருகின்றன.