ஹிட் படங்களை நழுவவிட்ட சாந்தனு பாக்யராஜ்
சாந்தனு பாக்யராஜ் திரையுலக பின்னணி கொண்ட கதாநாயகன். இயக்குனர் நடிகர் திரைக்கதை எழுத்தாளர் இசை இயக்குனர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முக வித்தகரான தந்தை பாக்யராஜ் மற்றும் பலமொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் தாய் பூர்ணிமா பாக்யராஜ்.

இளம் வயதிலேயே தன் தந்தையை பாக்யராஜின் படத்தில் குழந்தை நடிகராக நடித்துள்ளார். 1998 வேட்டியை மடிச்சுக் கட்டு குழந்தையின் கலைஞராக களமிறங்கிய இவர் பின்பு 2008 முன்னணி கதாநாயகனாக திரையுலகில் வெளி வந்தார்.
இதற்கிடையில் 2006ல் தன் தந்தையுடன் உதவி இயக்குனராக தன் சகோதரி சரண்யா பாக்யராஜ் முதல் படமான பாரிஜாதம் எனும் படத்தில் வேலை செய்தார்.
அதன் பிறகு மலையாள படம் ஒன்றில் மோகன்லாலுடன் இணைந்து துணை நடிகராக நடித்திருந்தார். முழுமையாக பாசிட்டிவ் கமெண்ட் கிடைக்காமல் கலவையாக கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தந்தை பாக்கியராஜ் இருமொழிகளில் சித்து +2 மற்றும் ஹைதராபாத்தில் காதல் இவரை கதாநாயகனாகக் கொண்டு இயக்க அந்தப்படமும் திரையுலகில் பெரிதாக வரவேற்கப் படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அருமையான திரைப் பின்னணி கொண்ட இவருக்கு தனித்துவமான படங்கள் கதாநாயகனாக அமையவில்லை. வெளியுலகில் இவ்வாறு தெரியும் சாந்தனு பல வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறார்.

தவறவிட்ட வாய்ப்புகள்
சாந்தனு பாக்யராஜை ஷங்கரின் ‘பாய்ஸ்’, பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ போன்ற ஹிட் லிஸ்ட் தழுவிய படங்கள்காக அணுக வயது காரணமாக தந்தை பாக்யராஜ் நிராகரித்துவிட்டார். மற்றும் ஒரு தனித்துவமான சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் வாய்ப்பும் நழுவி உள்ளது. இந்தப் படம் மட்டும் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை என வருந்தி உள்ளார்.
இதை விதியின் விளையாட்டு என்பதா கடவுள் இட்ட கணக்கு என்பதா என்று தெரியவில்லை. சாந்தனு பாக்யராஜ் இந்த படங்களை நடித்து இருந்தால் எப்படி இருக்கும்!