சென்னயில் பாதுகாப்பு பணிகள்
சென்னையை பாதுகாக்க களமிறங்குகிறது. இந்திய கமாண்டோக்கள் சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் கண்காணிக்க இராணுவ கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஏற்படுத்தப்படவில்லை என விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரனோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகின்றது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்த முடிய அரசு திணறி வருகின்றது.

சென்னையில் ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வெளியே வருவது. ஆகியவற்றை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இப்பணிகளுக்கு அரசு மத்திய படை பயன்படுத்துகிறது என்ற தகவல்கள் கிடைத்தன.
ஆனால் அதனை விஸ்வநாதன் அவர்கள் மறுத்துள்ளார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது இன்னும் கமாண்டோ படை வீரர்களை இறங்கி பாதுகாக்க வைக்க தேவைப்படவில்லை என்று இன்று சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

சென்னை முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நாளுக்கு நாள் பெருகி வரும் வைரஸ் நோயால் மக்கள் பீதியில் உள்ளனர் வெளியில் வருவதற்கு அச்சம் என்பது அதிகமாக இருக்கின்றது.
தேவையைவிட அதிகமாக வெளியில் வர யாரும் விருப்பம் கொள்வதில்லை. சென்னையில் இந்த இக்கட்டான சூழ்நிலையை அரசு திறமையாக கையாண்டு வருவதாகவும் அரசு அறிவித்துள்ளது.