மன நெகிழ்வுடன் கங்கனா..!!
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட் திரையுலகம் குறித்து தான் கடந்து வந்த பாதைகளை குறித்து பேசியுள்ளார். அதில் தன் முன்னாள் காதலர் தன்னை பணத்தாசை பிடித்தவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார்.

அவரின் வார்த்தைகளை எப்படி பொய்யென நிறுபனம் செய்து காட்டுவது என்பது எனக்கு தெரியவில்லை என்றும், அப்போது பணம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்ததாகவும், சிறந்த வீடு வாங்கவும் 50 வயதில் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் வந்த புதிதில் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை எனக்கூறிய கங்கனா தான் ஒரு நடிகர் குடும்பத்தின் பின்னணியில் இருந்து வராததால் தான், யாரும் தன்னை கண்டுகொள்ளவே இல்லை என வருத்தம் தெரிவித்து பேசி உள்ளார்.
கேங்ஸ்டர் படத்திற்கு பிறகு விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவும் விருது வாங்க வேண்டும் என்று அணிந்து செல்ல ஒரு புதிய ஆடை கூட இல்லாமல் நான் இருந்தேன். வாங்குவதற்கான பணமும் அப்பொழுது தன் கையில் இல்லை. என் நண்பரும் ஆடை வடிவமைப்பாளர் ஆன என் உடைக்கான ஸ்பான்சர் செய்தார்கள்.
அவரும் தன் கஷ்ட காலத்தில் தான் உதவி செய்ததாக தன் கஷ்ட காலத்தை மன நெகிழ்வுடன் கூறியுள்ளார். இவரது பெற்றோர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்து உள்ளனர். நண்பர் செய்த உதவியால் தான் பல விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிந்தது.

அவர் எனக்காக சில உடைகளை உருவாக்கித்தரும் போது இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என ஆச்சரியமாக எண்ணியதாகவும். ஒருவர் எனக்காக உதவி செய்வது மிகவும் அற்புதமான சூழ்நிலையாக இருந்தது. ஒருவர் எனக்காக உதவி செய்வது மிகவும் அற்புதமான விஷயம்.
அவர் இல்லை என்றால் என்னால் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்க முடியாது. மேங்கோ ஆடைகள் வகைகள் தான் என்னிடம் இருந்திருக்கும். அந்த நேரத்தில் என்னிடமிருந்த ஆடம்பரமான உடை, அந்த புள்ளியிலிருந்து நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். இது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் பற்றி பேசிய கங்கனா பாலிவுட் உலகின் நெபோட்டிச குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்த இவர். வெளிநபர்களை வாரிசு நடிகர்கள் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி இவ்வாறு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.