அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

பேரழகியாக இருக்க ஆசையா..!!

ஹீரோயின்களை போல நீங்களும் உங்கள் அழகை பேரழகியாக மாற்ற இயற்கையாகவே பல குறிப்புகள் உள்ளது. அதில் பலவற்றை உங்களுக்காக இந்தப்பதிவில் கொடுத்துள்ளோம். தலைக்கு குளிக்கும் போது ஒவ்வொரு முறையும் டீ டிக்காஷன் கலந்த தண்ணீரால் கூந்தலை அலசி எடுங்கள். கூந்தல் மினுமினுப்பாக இருக்கும்.

முட்டைக்கோஸ், கேரட், தக்காளி, புதினா என அவற்றை சிறிது கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவிக் கொண்டால் உங்கள் வேலைகளை பார்த்தாலும் வேலைகளை முடித்துவிட்டு முகம் கழுவினால் போதுமானது. எப்போதும் இல்லாத படி உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும். தினசரி வெறும் கால்களுடன் கடற்கரை மணலில் சிறிது தூரம் நடந்தாலே கால்களுக்கு நல்ல பயிற்சி மட்டுமின்றி அழகும் கூடும்.

சிறிதளவு பாலாடையை எடுத்து ஒவ்வொரு நகத்தின் மேலும் எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி ஒவ்வொரு நகத்தின் மேலும் வைத்து மசாஜ் செய்து வர, நகங்கள் பறக்க ஆரம்பிக்கும். கைகளில் ஏதேனும் ஒரு கிரீம் அல்லது பாலாடையை தடவிக் கொண்டு நன்றாக தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து கைகளை நீராவி படும் படி சிறிது நேரம் வைத்திருங்கள்.

துடைத்து விட்டு கைகளை மெல்லிய துணியால் 10 நிமிடங்களுக்கு சுற்றிக் கொண்டிருந்து உங்கள் கைகள் பட்டு மாதிரி இருக்கும். மாலை நேர பார்ட்டிகளுக்கு செல்லும் போது கண் இமைகளின் மேல் கறுப்பு நீல நிற மஸ்காராவை தடவிப் பாருங்கள். வித்தியாசமான அழகில் பளிச்சென்று இருக்கும்.

கண்களுக்கு மேக்கப் செய்யும் போது மேல் இமைகளின் உள்பக்கம் மெல்லிய கோடாகவும், வெளிப்புறத்தில் சற்றே தடியாகவும் கண்களை விட கொஞ்சம் வெளியே வருகிற மாதிரியும் இட்டுக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் கண்களும் கவிபாடும். ஈஸ்ட் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு எடுத்து பசைபோல வச்சுக்குங்க.

படுக்கச் செல்லும் முன் இதை முகப்பருக் களுக்கு மேல புள்ளிகள் மாதிரி வைத்துக் கொண்டு படுக்க வேண்டும். இதில் உள்ள பாக்டீரியாவை கொள்ளும் சக்தி பருக்களை நீக்கும்.

கூந்தலுக்கு நீளமான பற்கள் கொண்ட சீப்புகள் உபயோகப்படுத்துங்கள். ஷாம்பு வாங்கப்போறீங்களா? அந்த ஷாம்பு சாம்பல் மற்றும் செலினியம் ஆகியவை இருக்கும்படி பார்த்து வாங்குங்க. அவைதான் பொடுகை கட்டுப்படுத்தி உங்கள் கூந்தலை சுத்தமாக வைக்க கூடியவைகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *