மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள்..!
நாம் உண்ணும் உணவில் அறுசுவை இருக்க வேண்டும் என்ற பழைய மொழி போய்விட்டது என்றே சொல்லலாம். இன்றைய காலத்தில் வீனா போன அனைத்தும் அறுசுவையாக தோன்றுவது தான் வருத்தத்திற்குரியது.
ஆப்பிள் அல்லது செர்ரி பழத்தின் மீது பிரவுன் சுகர் அல்லது வெள்ளைச் சர்க்கரை தூவி ஒரு நிமிடம் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்திய பின் சாப்பிடலாம். இது சுவையாக இருப்பதுடன் இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்தும்.

மாஸிடோனியன் பருப்பு மற்றும் பிரேசில் பருப்பு ஆகியவற்றை கொழுப்பு சத்தும் கலோரி அளவும் அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சைனீஸ் உணவு கூடங்களில் உணவு சாப்பிடும்போது மொறுமொறுப்பான உணவு வகைகளை தவிர்த்து இது போன்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் உட்பகுதியில் உள்ளவைகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு மேல் பகுதியை தவிர 400 – 500 வரையிலான கலோரியை குறைக்க முடியும்.
திரைப்படங்கள் பார்க்கும்போது வெண்ணெய் சேர்த்து பெரிய பாப்கார்ன் வாங்குவது விடுத்து சிறிய கப்பலில் வைத்து சாப்பிடவும். இதனால் 350 கலோரி உடலில் சேர்வதை தவிர்க்க முடியும். வெண்ணீரில் தேன் கலந்து குடித்து வருவதால் உடல் எடை குறையும். இதில் எலுமிச்சம்பழம் பிழிந்து குடிக்கலாம். எளிய உணவு கட்டுப்பாட்டு அட்டவணையை பின்பற்றினாலே நல்ல பலனை பெற முடியும்.
காலை சிற்றுண்டிக்கு கோதுமை கஞ்சி மதிய உணவிற்கு ஒரு கப் அரிசி சோறு, பச்சை காய்கறிகள் இரவு உணவாக பழவகைகள் என வாரத்திற்கு மூன்று நாட்களாவது சாப்பிடப் பழகினால், நல்ல பலனை பெற முடியும்.
மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுங்க
மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள் சாப்பிடுவதற்காக வாழ்வது அல்ல. வாழ்வதற்காக சாப்பிடுகிறோம். இனிப்பு வகைகள், ஐஸ் கிரீம் வகைகள் வறுத்த உணவு ஐஸ்கிரீம் ஊற்றப்பட்ட சாலட்டுகள், பிஸ்கட், கேக் வகைகள், குளிர்பானங்கள் உண்பதை தவிர்த்து அதற்குப் பதிலாக பேக் செய்து ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.

தொலைக்காட்சி பார்த்து கொண்டு உண்பதை தவிர்ப்பது நன்று. இதன் மூலம் இரவு முழுவதும் கொழுப்புச்சத்தை வயிற்றில் தேக்கி வைக்கப் படுவது தவிர்க்கப்படும். என்பதோடு மறுநாள் காலை சிற்றுண்டி உட்கொள்ளவும் இயலும். இரவு உணவை முடித்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பதில் வெற்றி நிச்சயம்.
காபியில் காஃபின் என்ற நச்சு பொருள் 40 மில்லி கிராம் குறைவாக உள்ளது. பசும் தேநீர் அருந்தினால் உடல் புத்துணர்வு அதிகரிக்கும். ஒருநாளைக்கு தேவையான உணவை நாள் முழுவதும் சிறிய பகுதியாக பகிர்ந்து உண்ணும் போது, நமது பசி கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும் இது உதவுகிறது.
எடையை குறைக்கும் முயற்சி
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கூடியவரையில் மாவுச்சத்து புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். அளவை திடீரென குறைத்துக் கொள்வதென்பது கடினம் தான் எனினும், உணவின் ஒரு பகுதியாக பழம் அல்லது பச்சை பயறை சேர்த்துக் கொள்வது நலம்.
உடல் எடையை குறைக்க வேண்டும். என்பதற்காக சாப்பிடுவதை விடாதீங்க. குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஐந்து முறை குறைந்த அளவில் சாப்பிட்டு வருவதால் உடல் புத்துணர்வை நிலையாக வைத்திருக்க உதவும். உடல் எடை குறைக்க ஈடுபட்டிருக்கும்போது கூடியவரை மாவுச்சத்து புரதச்சத்து உணவு வகைகளை ஒரேசமயத்தில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
மெதுவாக சாப்பிட வேண்டும் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம் நீங்கள் பூரணமாக உணவு உட்கொண்டதாக மனம் அறியும். உங்களுக்கு என்ன பரிமாறப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பது முக்கியமல்ல. உங்களுக்கு போதுமான அளவுக்கு உணவு உட்கொள்ளுதல் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.