டிஎன்பிஎஸ்சிபத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்புபோட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சி

டின்பிஸ்சி மற்றும் யுபிஸ்சி தேர்வுகளுக்கான அன்றாட தகவல்கள் -11.11.2026

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (International Solar Alliance – ISA) என்பது சூரிய ஆற்றல் பயன்பாட்டை உலகளவில் அதிகரிக்கவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உருவாக்கப்பட்ட ஓர் சர்வதேச அமைப்பாகும்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (International Solar Alliance) தலைவராக இந்தியா 2026-2028 ஆம் ஆண்டிற்கான கால அளவிற்கு மீண்டும் (தொடர்ந்து 3-வது முறையாக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

பிரான்ஸ் நாடு இணைத் தலைவராக (Co-President) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) – Global Innovation Index 2026

WIPO வெளியிட்ட உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index – GII 2026) இந்தியா 38-வது இடத்தை பிடித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) – உலகளாவிய கண்டுபிடிப்புக் குறியீடு 2026 (Global Innovation Index – GII 2026) பற்றிய விரிவான தொகுப்பு:

இந்தியா கடந்த 16 ஆண்டுகளாகத் (2011–2026) தொடர்ந்து தனது வருமான நிலையைத் தாண்டி கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் நாடாக (Innovation Overperformer) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம் புக்கர் பரிசு 2026 (Booker Prize)

பிரிட்டிஷ் எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் (M. John Harrison) தனது ‘The End of Everything’ என்ற நாவலுக்காக 2026-ன் புக்கர் பரிசை வென்றார். இவர் புக்கர் பரிசு பெறும் மிக மூத்த எழுத்தாளர் ஆவார் (81 வயது).

தனது 81-வது வயதில் புக்கர் பரிசை வென்றதன் மூலம், புக்கர் பரிசு வரலாற்றிலேயே இப் பரிசைப் பெறும் மிக மூத்த எழுத்தாளர் என்ற சாதனையை எம். ஜான் ஹாரிசன் படைத்துள்ளார்.

புக்கர் பரிசு வரலாற்றில் ஒரு அறிவியல் புனைகதை (Science Fiction / Post-apocalyptic novel) இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

The End of Everything’ நாவல் எதிர்காலத்தில் ஒரு மர்மமான பேரழிவிற்குப் பிந்தைய இங்கிலாந்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட அறிவியல் புனைகதையாகும்

ஜனாதிபதியின் கொடி விருது (President’s Police Colour):

உத்தரகாண்ட் மாநில காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனாதிபதியின் போலீஸ் கொடி விருதை வழங்கினார்.குற்றத்தடுப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சேவை மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக வழங்கப்பட்டது.

ஒரு நாட்டின் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநில காவல் துறைகளுக்கு வழங்கப்படக்கூடிய மிக உயரிய மற்றும் மதிப்புமிக்க விருதாகும்.

நாட்டிற்கு ஆற்றிய 25 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவையைக் கௌரவிக்கும் வகையில் இது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *