டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்யுபிஎஸ்சிவிழிப்புணர்வு

செப்டம்பர் 23 நடந்த முக்கிய மாநில மற்றும் தேசிய நிகழ்வுகள்

தமிழ்நாடு உறுப்பு தான தினம்

உறுப்பு தான விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில், ‘ஹிதேந்திரன் நினைவாக’ ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று ‘தமிழ்நாடு உறுப்பு தான தினம்’ அனுசரிக்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தோரின் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

ஏன் ஹிதேந்திரன் நினைவு கூற வேண்டும்??

2008-ல் மூளைச்சாவு அடைந்த தனது 15 வயது மகன் ஹிதேந்திரனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த மருத்துவர் தம்பதியரின் முடிவு, தமிழகத்தில் உறுப்பு தானத்தைப் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன் நினைவாகவே செப்டம்பர் 23 உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (Transplantation Authority of Tamil Nadu) மூலம் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் வெளிப்படையாகவும், முறையான முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலும் நடைபெறுகின்றன

உறுப்பு தானம் செய்பவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களின் உடலுக்கு அரசு மரியாதையுடன் (State Honours) அடக்கம் செய்யப்படும் என்ற முன்னோடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெற்று, தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

பூம்புகாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் கண்டுபிடிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் கடற்பகுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆழ்கடல் அகழாய்வில், சங்க காலத்தில் மேற்காசிய வர்த்தகத் தொடர்பை உறுதிப்படுத்தும் ‘டார்பிடோ ஜாடி’ (Torpedo Jar) துண்டு மற்றும் 4 பழங்கால உறைகிணறுகள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டன.

பொருட்களைக் கடல்வழியாகக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட கூம்பு வடிவ மண்பாண்டத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது சங்க காலப் பூம்புகார் துறைமுகத்தின் பன்னாட்டு வணிகத் தொடர்பை வெளிப்படுத்துகிறது.

கடற்கரையை ஒட்டிய பகுதியில் ஒரே இடத்தில் 4 சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அக்கால மக்களின் குடிநீர் மேலாண்மை மற்றும் குடியிருப்புகளின் அமைப்பைக் காட்டுகின்றன.

9-வது இந்திய சர்வதேச தண்ணீர் வாரம் (New

புது தில்லியில் நடைபெற்று வரும் “இந்திய சர்வதேச தண்ணீர் வாரம் 2026” மாநாட்டின் ஒரு பகுதியாக, உத்தரகாண்ட் – இமாச்சலப் பிரதேச எல்லையில் யமுனையின் துணை நதியான டான்ஸ் ஆற்றின் குறுக்கே ₹11,500 கோடியில் அமையவுள்ள தேசிய கிஷாவ் பல்நோக்கு அணைத் திட்டத்திற்கான (Kishau Dam) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு

5 நாட்கள் வேலை வாரக் கோரிக்கையை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், வாடிக்கையாளர் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *