இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -24.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 24.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 7, வியாழக்கிழமை, September 24, 2026 பஞ்சாங்கம் –
திதி : 11:18 PM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி
நட்சத்திரம் : அவிட்டம் 10:35 AM வரை பிறகு சதயம்
யோகம் : த்ருதி 03:54 PM வரை, அதன் பின் சூலம்
கரணம் : கௌலவம் 11:09 AM வரை பிறகு சைதுளை 11:18 PM வரை பிறகு கரசை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.45 முதல் 11.45 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
குளிகை: காலை 01.30 மணி முதல் 03.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (24.09.2026)
மேஷம் – ஊக்கம் அதிகரிக்கும்
ரிஷபம் -அன்பு மேலோங்கும்
மிதுனம் -மன நிறைவு
கடகம் -ஆக்கம் அதிகரிக்கும்
சிம்மம் -சிக்கல் உண்டாகும்
கன்னி சினம உண்டாகும்
துலாம்-உழைப்பு அதிகரிக்கும்
விருச்சிகம் -தன லாபம் பெருகும்
தனுசு -மகிழ்ச்சி பொங்கும்
மகரம் -நட்பு மலரும்
.கும்பம் -ஆரோக்கியத்தில் நலம்
மீனம் -ஆனந்த களிப்பு
பிரதோஷம் நாள்
இன்றைய நாளானது சிவ பெருமானின் அருளை பெற தரிசனம் செய்ய வேண்டிய நாளாகும்,பிரதோஷ நேரத்தில் (மாலை 4:30 – 6:00) சிவபெருமானுக்கும் நந்திதேவருக்கும் அருகம்புல், வில்வம் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.
வியாழன் கிழமையில் பிரதோஷமானது வருவதால் குரு பிரதோஷம் ஆகும்,இந்த நாளில் சிவபெருமானுக்கு நெய் தீபமும், குரு அருள் பெற கொண்டைக்கடலை நைவேத்தியமும் செய்வது சிறப்பு.
நந்திக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், இளநீர், மற்றும் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடலாம்

