இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -23.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 23.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 6, புதன்கிழமை, September 23, 2026 பஞ்சாங்கம் –
திதி : 10:50 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : திருவோணம் 09:09 AM வரை பிறகு அவிட்டம்
யோகம் : சுகர்மம் 04:26 PM வரை, அதன் பின் த்ருதி
கரணம் : பவம் 10:22 AM வரை பிறகு பாலவம் 10:51 PM வரை பிறகு கௌலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 09.00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (23.09.2026)
மேஷம் -அமைதி நிலவும்
ரிஷபம் -ஈகை உண்டாகும்
மிதுனம் -ஊக்கம் அதிகரிக்கும்
கடகம் -மறதி உண்டாகும்
சிம்மம் – ஏமாற்றம் உண்டாகும்
கன்னி -நன்மை உண்டாகும்
துலாம்-கவலை உண்டாகும்
விருச்சிகம்-ஆதாயம் கிடைக்கும்
தனுசு -ஆரோக்கியம் தேறும்
மகரம் -லாபம் ஏற்படும்
கும்பம் -அச்சம் உண்டாகும்
மீனம் -நற்செயல் பெருகும்
வாமண ஜெயந்தி
வாமன ஜெயந்தி என்பது மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தைக் கொண்டாடும் ஒரு புனிதமான நாளாகும். ஆவணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் (விஜய துவாதசி) இந்நாள் கொண்டாடப்படுகிறது.
பிரகலாதனின் பேரனான மகாபலி (மாவலி) சக்கரவர்த்தி மிகச்சிறந்த கொடைவள்ளலாகவும் தர்மவானாகவும் திகழ்ந்தார். ஆனால், அவரது அபாரமான ஆற்றலால் தேவர்களை வென்று மூவுலகையும் தன் கட்டுப்பாட்டில் வைிருந்தார்.
தேவர்களின் குறையைத் தீர்க்க, மகாவிஷ்ணு ஒரு சிறு குள்ள அந்தணராக (வாமனர்) அவதரித்து மாவலியிடம் வந்தார். தானமாகத் தனக்கு மூன்றடி நிலம் தருமாறு கேட்டார்.
தானம் தர மாவலி ஒப்புக் கொண்டதும், வாமனர் திரிவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்தார்:
மாவலியின் அகந்தையை அழித்து, அவரைத் தலையில் பாதத்தை வைத்து பாதாள உலகிற்கு அதிபதியாக்கினார். அதேசமயத்தில் அவரது பக்தியை மெச்சி, ஆண்டுதோறும் தன் மக்களைக் காண பூமிக்கு வர வரமளித்தார்

