இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -18.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 17.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 1, வெள்ளிக்கிழமை, September 18, 2026 பஞ்சாங்கம் –
திதி : 01:01 PM வரை சப்தமி பின்னர் அஷ்டமி
நட்சத்திரம் : கேட்டை 10:44 PM வரை பிறகு மூலம்
யோகம் : ப்ரீதி 01:34 PM வரை, அதன் பின் ஆயுஷ்மான்
கரணம் : வனசை 01:01 PM வரை பிறகு பத்திரை 02:13 AM வரை பிறகு பவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 09.15 மணி முதல் 10.15 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 03.00 முதல் 04.30 மணி வரை
குளிகை: காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
சூலம்: வெல்லம்
பரிகாரம்: மேற்கு
இன்றைய ராசிபலன் (17.09.2026)
மேஷம் -நட்பு பெருகும்
ரிஷபம் -ஆரோக்கியத்தில் சுகம்
மிதுனம் – நன்மை உண்டாகும்
கடகம் -லாபம் பெருகும்
சிம்மம் – செலவு அதிகரிக்கும்
கன்னி – அன்பு மேலோங்கும்
துலாம்-தடங்கல் உண்டாகும்
விருச்சிகம்-மகிழ்ச்சி பொங்கும்
தனுசு – ஆதாயம் கிடைக்கும்
மகரம் -காரிய தாமதம்
கும்பம் -இன்பம் பெருகும்
மீனம் -வரவு அதிகரிக்கும்
புரட்டாசி மாதம் தொடக்கம்
புரட்டாசி மாதம் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்ட மாதமாகக் கருதப்படுகிறது,புரட்டாசி மாதம் விஷ்ணு (பெருமாள்) வழிபாட்டிற்கு உகந்தது. பெருமாள் பூலோகத்தில் ஸ்ரீவெங்கடாசலபதியாக (சீனிவாசன்) அவதரித்தது புரட்டாசி மாதத்தில் தான் எனக் கருதப்படுகிறது.
இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து, தளிகை இட்டு (தளிகை படைத்து), மாவிளக்கேற்றி வழிபடுவது அனைத்து விதமான கஷ்டங்களையும் நீக்கி புண்ணியத்தைத் தரும் என்பது நம்பிக்கை.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்ததாகக் கருதப்படும் மஹாளய அமாவாசை புரட்டாசி மாதத்தில் தான் வருகிறது.

