இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்-08.08.26
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 08.08.2026
பரபாவ வருடம் ஆடி 23, சனிக்கிழமை, August 08, 2026 பஞ்சாங்கம் –
திதி : 01:59 PM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : ரோஹிணி 04:51 PM வரை பிறகு மிருகசீரிடம்
யோகம் : துருவம் 09:01 AM வரை, அதன் பின் வியாகாதம் 05:37 AM வரை, அதன் பின் ஹர்ஷணம்
கரணம் : பத்திரை 01:59 PM வரை பிறகு பவம் 12:34 AM வரை பிறகு பாலவம்.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை
குளிகை: காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (08.08.2026)
மேஷம் -ஆர்வம் அதிகரிக்கும்
ரிஷபம் -பணிவு ஏற்படும்
மிதுனம் -பரிவு உண்டாகும்
கடகம் -செலவு அதிகரிக்கும்
சிம்மம் – அனுக்கூலம் உண்டாகும்
கன்னி -ஆரோக்கியத்தில் நலம்
துலாம்-பெருமை சேரும்
விருச்சிகம்-வரவு உண்டாகும்
தனுசு -சினம் உண்டாகும்
மகரம் -சிந்தனை பெருகும்
கும்பம் -அமைதி தேவை
மீனம் -குடும்பத்தில் அமைதி
உங்களுக்கு தெரியுமா??
ஒரே ஒரு டீஸ்பூன் மண்ணுக்குள் உலக மக்கள் தொகையை விட அதிகமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன
நாம் விழித்திருக்கும் போது மூளை உருவாக்கும் மின்சாரத்தை வைத்து ஒரு சிறிய விளக்கை எரிய வைக்க முடியும்.
கடல் செடிகள் மற்றும் பாசிகள் பூமியின் மொத்த ஆக்ஸிஜன் தேவையில் பாாதிக்கும் மேல் உருவாக்குகின்றன.
மனித வயிறுகளின் உள்ளே இருக்கும் அமிலம் இரும்புப் பிளேடுகளையே கரைக்கும் சக்தி கொண்டது,அதனால் தான் பெரியவர்கள் கல்லை தின்றாலும் கரையுற வயது என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்.

