மனோஜை மணக்கோளத்தில் பார்க்கும் ரோஹிணி – உண்மையை தெரிந்து கொள்ளும் மனோஜ் அரங்கேறும் புதிய twist
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து,மீனா,ஸ்ருதி, ரவி என குடும்பமாக இணைந்து கனகாவின் திருமணத்திற்கு வேலை செய்து வருகின்றனர், அது மட்டுமில்லாமல் ரோஹிணி தான் கனகாவிற்கு அலங்காரம் செய்ய வருகிறாள், என்ன ஒரு எதார்த்தம்! மனோஜ் கதை இனி அவ்வளவுதான் என்ன நடந்தது பார்க்கலாம்
முத்துவின் அறிமுகம்
திருமணத்திற்காக முத்துவும் மீனாவும் பரப்பரப்பாக பூவெல்லாம் அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றனர், ஸ்ருதியின் ரெஸ்டாராண்டில் இருந்து உணவெல்லாம் வந்து விட்டது, அப்போதுதான் முத்துவிற்கு தெரிய வருகிறது ஏற்கனவே கார் சவாரி வந்தது, கனகா காரில் இருந்து காணாமல் போய் முத்து கண்டுபிடித்து கொடுத்தது இவங்க தான் என மீனாவிடம் கூறி கொண்டிருக்கிறான்
மனோஜின் குழப்பமான மனநிலை
சற்று நேரத்தில் கல்யாணமே நடக்க போகிறது ஆனால் மனோஜின் முகத்தில் சந்தோசமே இல்லை மாறாக குழப்பதிலேயே இருக்கிறார் முகமெல்லாம் வாடி போயிருக்கிறது, ஒரே குழப்பமாகவே இருக்கிறார், கனகாவின் அம்மா மனோஜை ஆரத்தி எடுத்து வரவேர்த்து உள்ளே அமரவைத்திருக்கிறார்கள்,
கடைசி வரைக்கும் numeralogist பேச்சை கேட்டு இங்கு வரை உக்காந்திருக்கிறார், புதிய ட்விஸ்டே ரோஹிணி தான் கனகாவிற்கு மணப்பெண் அலங்காரம் செய்கிறார், குழந்தையை போல் கவனித்து கொள்கிறார் ரோஹிணி
credits -google

மாப்பிள்ளைக்கு ரொம்ப பெரிய மனசுதான்
மீனாவோ கனகாவின் இந்த மனநிலையை புரிந்து கொண்டு,மாப்பிள்ளை கல்யாணம் பண்ண முன் வந்திருக்கிறார் என்றால் மாப்பிள்ளைக்கு ரொம்ப பெரிய மனசு என்று பேசி கொண்டிருக்கிறார்கள், மனோஜ் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தால் என்னாகுமோ??
அதிர்ச்சியில் மனோஜ்
கல்யாண வேலையெல்லாம் எப்படி என பார்க்க சந்தோஷ் கீழே வருகிறார் ஆனால் அவருக்கு கிடைத்ததோ பெரும் அதிர்ச்சி இங்கு மருத்துவமனாகவும் இருந்ததை பார்த்து தட்டு தடுமாறி ஓடி வந்து மனோஜிடம் இன்னைக்கி உன் கதை முடிய போகுது பப்பரப்பா மனோஜ் உன்னோட வாழ்க்கை நெஜமாவே பப்பரப்பானதா போகப் போகுது உன் தம்பியும் உன் தம்பி பொண்டாட்டியும் கல்யாணத்துக்கு வந்து இருக்காங்கனு சொல்லறாரு
அவர் சொன்ன உடனே மனோஜ்க்கு பயத்துல தப்பி ஓடலாம்னு பாக்கறாரு ஆனா வழியில்லை, ஒரு பக்கம் முத்து மீனா, இன்னோரு பக்கம் கல்யாண வீட்டிலேயே ரோஹிணி இருக்காங்க?
எப்படியோ ஒரு வழியா முத்து மீனா ரவி ஸ்ருதியை காரணம், சொல்லி வீட்டை விட்டு அனுப்பிடலாம்ம்னு மனோஜ் திட்டம் போடுறாரு,கடைசி நேரத்தில் மனோஜ் தான் கல்யாண மாப்பிள்ளை என தெரிந்து கொள்கிறார் முத்து இனி அடுத்து என்ன நடக்கபோகிறது நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்

