சென்னை வாசிகளுக்கு போனஸ் – வந்தாச்சு பறக்கும் ரயில்!சென்னை கடற்கரை to பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை
சென்னை மக்களின் பெரும் பேசு பொருளாக இருந்த சென்னை கடற்கரை to பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவைகள் மார்ச் 14 ஆம் தொடங்கியுள்ளது

Source credit – Google
ஏற்கனவே சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை ஏற்கனவே பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது இதன் அடுத்த கட்டமாக வேளச்சேரி to பரங்கிமலை சேவை இனிதே இன்று முதல் அதிகார பூர்வமாக தொடங்கியுள்ளது இந்த சேவை சுமார் 20 ஆண்டுகளுக்கு நடந்த நில எடுப்பு பிரச்னைக்கு கிடைத்த வெற்றியாகும்
இந்த சேவை மூலம் மடிப்பாக்கம்,ஆதம்பாக்கம் மற்றும் தில்லை நகர் பகுதி மக்கள் பெரும் பயனைடையும் வகையில் அமைந்துள்ளது
சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 43 ஜோடி ரயில்களும், கடற்கரை முதல் வேளச்சேரி வரை 2 ஜோடி ரயில்களும், பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை 3 ஜோடி ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

