டென்ஷனை விடுங்க! இந்த டிப்ஸ் follow பண்ணுங்க சிலிண்டர் மிச்சம் பண்ணுங்க!

மார்ச் 10,2026 முதல் சிலிண்டர் வரத்து குறைந்துள்ளதால் பல ஹோட்டல்கள் மாற்று யோசனையாக புகையில்லா அடுப்பை வாங்க ஆரம்பித்து விட்டார்கள், வீட்டில் சமைக்கும் தாய்மார்கல் என்ன செய்வார்கள் அவர்களுக்காகவே சிலிண்டர் மிச்சம் செய்ய நச்சுனு தகவல்களை பாக்கலாம
என்ன சமைக்கலாம் என்ற முடிவு செய்து விட்டு அதற்கு தேவையான காய்கறிகள், மசாலா பொருள்கள் pre பிளானாக எல்லாம் எடுத்து வைத்து சமைத்தால் மிச்சம் செய்யலாம்
சமைக்கும் காய்கறிகள் சமைப்பதற்கு முன்னரே அதாவது காலை சமைக்க வேண்டுமெனில் இரவே எடுத்து வெளியே எடுத்து வைத்து விட்டு சமைத்தால் தர்ப்பவெப்ப நிலைக்கு மாறி சீக்கிரம் வெந்து விடும்
குளிர் சாதன பெட்டியில் இருக்கும் பால், டீ, காபி போன்ற உணவுகள் எடுத்து நேரடியாக சூடு செய்யாமல் சிறிது நேரம் முன்பே வெளியே எடுத்து வைத்து தற்ப வெப்ப நிலை மாறிய பிறகு சூடு செய்யலாம்
அடுப்பை பத்த வைப்பதற்கு முன்பே பாத்திரத்தில் உள்ள தண்ணீரை முழுதுமாக துடைத்து பயன்படுத்த வேண்டும்
அரிசி பருப்பு போன்ற உணவு பொருளை 1 மணி நேரம் ஊரவைத்த பின்னர் சமைக்க சிலிண்டர் மிச்சம் செய்யலாம்
காய்கறி சாலட், பழுத்த பழங்கள், மில்க் ஷேக், முளைகட்டிய பயிருவகைகள் போன்ற உணவு பொருள்களை காலை உணவிற்கு எடுத்து கொள்ளலாம்
ஒவ்வொரு நேரத்திற்கு உணவு சமைக்காமல் இரண்டு வேளைக்கு சேர்ந்து உணவு சமைக்கலாம்
அலுமினிய பாத்திரங்களை குறைத்துசில்வர் பாத்திரத்தை பயன்படுத்தி induction stove உணவு சமைக்கலாம், முடிந்த அளவு சில்வர் pressure cooker, silver இட்லி பாத்திரம் வாங்கி பயன்படுத்தலாம்
Gas பர்னர் சிவப்பு நிறத்தில் எரிந்தால் அழுக்கு சேர்ந்து இருக்கும் இதை சுத்தம் செய்தால், நீல நிறத்தில் எரியும்
பயன்படுத்தும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு, அடுப்பை வெப்பத்தை குறைத்து பயன்படுத்தலாம்
LPG எரிவாயு மாற்றாக Bio -gas சிலிண்டர் பயன்படுத்தலாம்
👉 மேலும் படிக்க: சிலிண்டர்கள் கட்டுப்பாடு – ஹோட்டல் உரிமையாளர்கள் திண்டாட்டம்

