கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்தேர்வுகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொது அறிவு வினா விடைகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் பொது அறிவு பகுதியில் சற்று விரிவாக ஆழமாக படிப்பது அவசியமாகின்றது. பொதுஅறிவு பாடம் இந்திய வரலாறு, பொருளியல், அறிவியல், கணக்கு ஆகியவற்றை உள்ளடக்கியது. பொது அறிவு பாடத்தில் வெற்றி பெற நாம் பள்ளி பருவத்திலிருந்து நமது தேடலை நமக்கான பாடத்தை தெளிவாக பகுத்து படித்திருந்தால் பொது அறிவு பகுதியை எளிதாக கையாண்டு வெற்றி பெறலாம்.

பொதுஅறிவு பாடத்தின் இருக்க வேண்டிய விழிப்புணர்வு

பள்ளி பருவத்தில் வரலாறு, பொருளாதாரம், பொது அறிவியல், இந்திய அரசியலமைப்பு, அடிப்படைக் கணக்கு பாடங்கள் நாம் புரிந்து உணர்ந்து தெளிவாக படித்திருந்தால் பொது அறிவு பாடத்தில் மதிப்பெண்கள் அதிகமாக பெறலாம்.

செய்தி வாசிப்பு பொதுஅறிவுக்கு உதவும்

செய்தி வாசிப்பினை நாம் சரியாக முறையாக செய்து வந்திருந்தால் பொது அறிவிற்கு பக்கபலமாக உதவும்.

சிலர் செய்தி வாசிப்போடு பேப்பர் கட்டிங் வைத்திருப்பார்கள் அத்துடன் வணிகம் விளையாட்டு, அரசியலமைப்பு ஆகியவை பற்றிய புரிதல் எளிதாக இருக்கும். இப்பதிவில் சில கேள்விகளை தொகுத்து கொடுத்துள்ளோம் தேர்வர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று இதனை முயற்சித்தோம் படிக்கவும் பயிற்சி செய்யவும் தேர்வில் வெற்றி பெறவும்.

செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியல் பொருளியல் ஆகும் என்று வரையறுத்தவர்

விடை : ஆடம் ஸ்மித்

ஆடம் ஸ்மித் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். நாடுகளின் செல்வம் இவர் எழுதிய புத்தகமாகும்.

பொருளாதாரத்தில் உற்பத்தி காரணிகள் என்று அழைக்கப்படுபவை

விடை : நிலம் உழைப்பு மூலதனம் தொழிலமைப்பு

நிலம் நிலப்பரப்பை உற்பத்திக்கான உதவும் பூமியை குறிக்கும். காற்று சூரிய ஒளி பூமி காடுகள் ஆறுகள் கனிம வளங்கள் நிலத்தில் அடங்கும்.

நிலமும் உழைப்பும் உண்மையான காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

தொழிலதிப்பு மற்றும் மூலதனம் பொருளாதாரத்தில் பெறப்பட்ட காரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.

உழைப்பு பொருளாதாரத்தில் ஊதியத்தை பெற்று தரும் நாம் செய்யும் வேலைக்கு உழைப்பு என்று பெயர். உழைப்பை உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பாகவும் கொடுக்கலாம்.

மூலதனம் பொருளின் உற்பத்திக்கு கொடுக்கப்படும் முதலீடு செல்வத்தைக் குறிக்கும்.

அதிக உழைப்புத் திறன் மூலம் செய்யக்கூடியது. உழைப்பாளர்களும் திறமை காரணிகள்

விடை :

தட்பவெப்ப நிலை

வேலை செய்வதற்கு ஏற்ற சூழல்

உழைக்கும் நேரம்

வேலையில் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு

சமுதாய துறைகள் எத்தனை

விடை: 3

முதன்மை துறை

இரண்டாம் துறை மற்றும்

சார்பு துறை

சமுதாயத்தில் முதன்மை துறை என்பது

விடை

இயற்கை பொருட்கள் உணவு உற்பத்தி

சமுதாயத்தின் பலவகை துறைகள் இருக்கின்றன பொருளாதாரத்தில் சக்கரத்தை போல் இவை சூழலும் பண்டங்கள் மற்றும் சேவை என அழைக்கப்படும் செய்யப்படும் பணிகள் அதன் இயக்கம் முதன்மை மற்றும் இரண்டாம் அத்துடன் சார்ந்த சார்பு துறை மூலமாக இயக்கம் பெறுகின்றது இதனைத் தான் உற்பத்தி சங்கிலி என்று அழைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *