Lunar eclipse 2024 : நூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த அபூர்வ சந்திர கிரகணம் பாதிப்பு ஏற்படும் ராசிகள்
2024 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரும் ஒரு அபூர்வ கிரகணமாகும். வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையும் முருக பக்தர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடும் பங்குனி உத்திரமும் சேர்ந்து வரும் மகத்தான நாளும் சந்திர கிரகணமும் வருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த சந்திர கிரகணத்தால் சில ராசியினருக்கு சிரமங்கள் ஏற்படும். எந்தெந்த ராசியினருக்கு என்ன பலன், யார் யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசி
புதிய வேலை , புதிய தொழில் சம்பந்தமான பணிகளில் தடை ஏற்படும் தொழில் சம்பந்தமாக செல்லும் பயணங்களில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் மற்றும் கருத்து வேறுபாடு ஏற்படும் எனவே கவனமாக இருப்பது நல்லது.
புதிய வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் எதிர்பார்த்த செய்திக்கு எதிர்மறையாக தான் வரும் நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.

புதிய முதலீடுகள் செய்வதில் விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக கையாள்வது நல்லது.
புதிய முதலீடு, புதிய தொழில் ,புதிய வேலை ஆகிய விஷயங்களில் சற்று விவேகத்துடன் செயல்பட்டு சந்திர கிரகணத்தின் பாதிப்பிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
கன்னி ராசி
2024 ஆம் ஆண்டு சந்திர கிரகணம் உத்திரம் நட்சத்திரத்தில் வருவதால் கன்னி ராசி அன்பர்களுக்கு தேவையற்ற மனக்குழப்பம், அலைக்கழிப்பு ஏற்படும்.
மனதில் தேவையற்ற குழப்பம் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது இதனால் மனக்கவலை மன உளைச்சல் ஏற்படும்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவநம்பிக்கையோடு பேசுவீர்கள் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் சண்டைகள் பிரச்சினைகள் ஏற்படும். எனவே உங்கள் வார்த்தைகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

புதிய முதலீடுகள் செய்ய நினைப்போர் பெரியோர்களின் ஆலோசனை மற்றும் அனுபவத்தை கேட்டு நன்கு ஆராய்ந்த பின்பு முதலீடு செய்வது நல்லது. அவசர அவசரமாக முடிவெடுத்து ஒரு விஷயத்தில் முதலீடு செய்தால் அது விரயத்தில் போய் முடியும்.
சந்திர கிரகணம் மன குழப்பத்தை ஏற்படுத்துவதால் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று தொய்வு ஏற்படும். எனவே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.
சிம்ம ராசி
2024 சந்திர கிரகணம் உத்திரம் நட்சத்திரத்தில் வருவதால் சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களுக்கு காலதாமதம் எந்த செயலிலும் தடை ஆகியவை ஏற்படும்
எதிலும் புதிய முதலீடுகளை போடுவதற்கு முன்பு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுக்கவும் பொறுமையிழந்து நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு உங்கள் பணத்தை விரயமாக்கும். இந்த சந்திர கிரகணம் உங்களுக்கு பண விரயம் காரியத்தடை ஆகியவற்றை அதிகமாக ஏற்படுத்தும்.

சூரியன் ஆளக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது எனவே முடிந்த அளவு வெளி உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.
தேவையில்லாத செலவுகள், காரியத் தடை , காலதாமதம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவேகத்துடன் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
தனுசு ராசி
சந்திர கிரகணம் 2024 தனுசு ராசி நேயர்களுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது முக்கியமாக வாகனத்தில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கையும் நிதானமும் தேவை
இந்த சந்திர கிரகணம் தந்தையின் உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிக கவனமாக இருப்பது நல்லது.

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதை கிடைத்தது குறைவு நீங்கள் எவ்வளவு தன் வேலை பார்த்தாலும் கடைசியில் உங்களுக்கு அவ பெயர் தான் கிடைக்கும் எனவே வேலை பார்க்கும் இடத்திலும் வேலைகளும் சற்று கவனமாக இருங்கள்.