தமிழக சிறார் நீதி வாரியம் தேர்வு இல்லாமல் மாபெரும் வேலைவாய்ப்பு..
பெரம்பலூர் சிறார் நீதி வாரியம் தற்போது மாபெரும் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது இதில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன தேர்வே இல்லாமல் நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு செய்யும் இந்த அரிய வாய்ப்பை யாரும் தவறவிடாமல் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று பயன்பெறுங்கள்.

காலிப்பணியிடங்கள்
பெரம்பலூர் சிறார் நீதி வாரியம் Social Worker Members ஆகிய பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்களை தற்போது அறிவித்துள்ளது.
கல்வித்தகுதி
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்தான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
சம்பளம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அவர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும் சம்பளம் குறித்தான விவரம் வேலை வாய்ப்பு பெற்ற பின்னரே தெரியவரும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சிரார் நீதி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கடைசி நாளான 02.04.2024 ஆகிய தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதிகாரப்பூர்வ இணையதளம்
👇👇👇👇👇👇