Ethirnechal serial update: காலை வாரும் எதிர் நீச்சல் சீரியல்; பேசாம இவரையே செலக்ட் பண்ணிருக்கலாம்
நமது சன் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தை எப்பொழுதும் தன்னிடம் தக்க வைத்துக் கொண்ட சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வந்தது. இதற்கு காரணம் அந்த நாடகத்தில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரமே .ஆதி குணசேகரன் ஆக மாரிமுத்து நடித்து வந்த நிலையில் அவரை பார்க்கவே சீரியல் பார்க்கும் ரசிகர்கள் பல பேர் இருந்தனர். என்னதான் அவர் பெண்களை வார்த்தையால் மிரட்டினாலும் வில்லனாக நடித்தாலும் வில்லனுக்கு இவ்வளவு பேன்ஸ்கள் இருந்த சீரியல் இதுதான். அவரின் நடிப்பை மக்களுக்கு கொடுத்து அவரை ரசிக்க தொடங்கிய மக்களை விட்டு விட்டு விண்ணுலகம் சென்றதால் ரசிகர்கள் நிலைகுலைந்து போனார்கள். அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்ற மனப்போக்குடன் இனி இந்த சீரியலை பார்க்கவே கூடாது என்றெல்லாம் பல பேர் விட்டு விட்டனர்.

இப்படி இருக்க எதிர்நீச்சல் சீரியலில் புதிய திருப்பமாக ஆதி குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி என்பவரை நியமித்தனர். ஆனால் வேல ராமமூர்த்தியை நாம் இதுவரை திரைப்படங்களில் வில்லனாக மிரட்டும் தோணியில் தான் பார்த்திருப்போம். அவர் பேசுவதே கையில் தான் அப்பேற்பட்ட அடிதடி வில்லனாக பார்த்த அவரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வாயால் மிரட்டும் வில்லனே தவிர கையால் அல்ல. ஆனால் வேல ராமமூர்த்தியோ எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுத்த மறுநாளே போலீஸ்காரர்களையே அடித்து நொறுக்கும் சீனில் நடித்துள்ளார். இதனைப் பார்த்த பலரும் அவரைப் பார்த்து பயந்து வருகின்றனர். வீட்டில் உள்ள பெண்களை என்ன செய்வார் இனி நாடகம் எவ்வாறு இருக்கப் போகிறது எப்பொழுதும் அடிதடியுடன் தான் இருக்குமோ என பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

சிரிப்பு கலந்த காமெடியும், வில்லத்தனமும் கலந்த கதாபாத்திரம் தான் ஆதி குணசேகரன். இதற்கு வேலராமமூர்த்தி சற்றும் பொருத்தமானவராக இல்லை. இவருக்கு பதிலாக மக்கள் மூன்று பேரை பரிந்துரைத்துள்ளனர். பசுபதி, அழகம்பெருமாள், இளவரசு ஆகிய மூன்று பேரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு போட்டால் மிக அருமையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் மூவருமே என்னதான் வில்லத்தனம் செய்தாலும் பேச்சில் காமெடி கலந்து இருப்பதால் அனைவரையும் சிரிக்கவும் வைப்பர் .இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் தான் ஆதி குணசேகரனுக்கு தேவை.

எனவே வேல ராமமூர்த்தியை இடமாற்றம் செய்து அவருக்கு பதில் மேலே குறிப்பிட்ட மூவரில் யாராவது ஒருத்தரை போட்டால் சீரியல் முன்பு போன்று டிஆர்பி யில் முதலிடம் பெற வாய்ப்பு உள்ளது.a இல்லையேல் ஒரு சில நாட்களிலேயே எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்ட் கார்டு போட வேண்டி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.