Tnpsc current affairs 2023: டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டிற்கான நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி தேர்வை எதிர்கொள்ளும் நண்பர்கள் தினமும் பயிற்சி செய்தால் மட்டுமே நீங்கள் தேர்வை எளிதில் வென்று உங்கள் லட்சியத்தை விரைவில் அடைய முடியும். நடப்பு நிகழ்வுகள் சிலவற்றை பார்ப்போம்.
முக்கிய வினா விடைகள்
1.19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இடம் எது?
விடை : சீனா
2. மதராஸ் மாநிலம் மெட்ராஸ் என எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
விடை: 1969
3. 132 வது டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது ?
விடை: மோகன் பாகன் சூப்பர் ஜெயன்ட்
4. இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சி295 விமானம் எந்த நாட்டைச் சார்ந்தது?
விடை : ஸ்பெயின்

5. 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி எப்போது தொடங்கி வைத்தார்?
விடை : செப்டம்பர் 24
6. விஷ்ணுபுரம் இலக்கிய விருது -2023 யாருக்கு வழங்கப்பட்டது?
விடை : யுவன் சந்திரசேகர்
7. சைபர்ஜாய் புயல் எங்கு உருவானது?
விடை : அரபிக் கடல்
8. மணிப்பூர் கலவரம் குறித்து விசாரணை மேற்கொள்ள யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது?
விடை : அஜய் லம்பா
9. கவச் தொழில்நுட்பம் எந்த வாகன விபத்தை தடுக்க உதவுகிறது?
விடை : இரயில்
10. தேனீ வளர்ப்பில் தேசிய விருது பெற்றவர் யார்?
விடை: வே. ஜூனோ