Bakiyalaxhmi promo update: எழிலை விட்டுப் பிரியும் அமிர்தா; காரணம் எழில் செய்த அந்த தவறு!!!
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்து வருடக்கணக்கில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீரியலாக பாக்கியலட்சுமி நாடகம் உள்ளது. அடுத்தடுத்த பரபரப்பான கதைகளத்துடன் மக்களை ஆர்வத்துடன் விரும்பி பார்க்க வைக்கும் நாடகமாக தற்பொழுது பாக்கியலட்சுமி உருவெடுத்து உள்ளது.

எழிலுடன் சந்தோஷமாக இருக்கும் அமிர்தா
பாக்கியலட்சுமி நாடகத்தில் அம்மாவின் பிள்ளையாக இருப்பவர் எழில். இவரை வெறுப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் அம்மாவை விட்டுக் கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக இருக்கும் ஒரு மகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அமிர்தா என்பவருடன் திருமணம் நடந்தது. அமிர்தா தனது முதல் கணவரை இழந்து படிப்பிற்காக சென்னை வந்து மாமியார் மாமனார் உடன் வாழ்ந்து வந்தார். இதனை அறிந்தும் அமிர்தாவை முழுமனதாக ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து தற்போது அமிர்தாவும் எழிலும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். எப்படி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கையில் நிலை திருப்பமாக ஒரு சோதனை இவர்களுக்கு காத்துக் கொண்டு உள்ளது.

அமிர்தாவின் 2-வது திருமணத்தை அறியும் கணேஷ்
தங்களுடைய மகன் கணேஷ் இறந்து விட்டதாக நினைத்து கவலையில் இருந்து வந்த அமிர்தாவின் மாமியார் மாமனாருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது. திடீரென இறந்து போனதாக நினைத்த கணேஷ் மீண்டும் உயிருடன் அவர்களின் கண்முன் வந்ததும் செய்வதறியாது சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். என்னதான் சந்தோஷமாக இருந்தாலும் ஒரு பக்கம் அமிர்தாவின் திருமணத்தை எவ்வாறு கணேஷிடம் சொல்வது என்று அவர்கள் குழம்பிப் போயிருந்தனர். கணேஷிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து மலுப்பி வந்தனர்.

இந்நிலையில் பொறுமையை இழந்த கணேஷ் அமிர்தாவை கண்டுபிடித்தே தீருவேன் என சென்னைக்கு வந்து பல இடங்களில் அமிர்தாவை தேடி வந்தார். ஒருவழியாக அமிர்தாவின் வீட்டை கண்டுபிடித்த கணேஷ் அங்கு சந்தோஷமாக சென்று கணேஷ் அமிர்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டது என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மனைவியையும் மகளையும் பார்த்து விட்டோம் என்ற சந்தோஷம் சில நொடிகளில் சுக்குநூறாக நொறுங்கியது. இனி கணேஷ் எடுக்க போகும் முடிவு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் கணேஷை பார்த்தால் அமிர்தா என்ன செய்யப் போகிறார் சிறிது நாட்களாக தான் அவர் ஏதோ கொஞ்சம் சந்தோஷமாக இருந்தார் அதற்கும் தற்பொழுது ஆப்பு வந்துவிட்டது .எழில் அமிர்தா வாழ்க்கை இனி என்ன ஆகப்போகிறது….
