Bakiyalaxhmi Update :சீரியலுக்கு எண்ட்ரி கொடுக்கும் சித்தா நடிகர் இனி இவர்தான் இணியாவிற்கு ஜோடியா?
விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதலிடம் பெற்று என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் ஆக பாக்கியலட்சுமி உள்ளது.இந்த சீரியல் குடும்ப எதார்த்தத்தை மிக எளிய முறையில் உணர்த்தும் நாடகமாக உள்ளது. ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் அநியாயங்கள், ஆண் எளிதாக ஒரு தவறை எவ்வாறு செய்கிறான், பெண்ணாக இருந்து அந்த குடும்பத்தை தாங்குவது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும் நாடகமாக பாக்கியலட்சுமி உள்ளது.

இப்பொழுது தந்தை வழியில் மகனும் என்பது போல செழியனும் கோபியை போலவே அதே தவறை செய்து வருகிறான் .இப்பதான் ஒரு வாழ்க்கை கிடைத்தது என்று ஆனந்தமாக தனது வாழ்க்கையை தொடங்கிய அமிர்தாவுக்கு உனக்கு பின்னாடியே ஆப்பு உனக்கு வருது நீ சந்தோஷமான இருக்க முடியாது என்பது போல அவரது இறந்து போன கணவர் கணேஷ் மீண்டும் திரும்ப வந்து அமிர்தாவை தேடிக்கொண்டு இருக்கிறான். இந்த சூழலில் அமிர்தாவின் குழந்தையான நிலா பாப்பா தொலைந்து போய் விடுகிறது.
மேலும் படிக்க : கோபியை ஆக்ரோசமாக அடித்த இனியா.. பாக்கியலட்சுமி சீரியலின் அதிரடி

பாக்கியலட்சுமியில் சித்தா நடிகர்
மிக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் சித்தா பட நடிகர் சித்தார்த் தொலைந்து போன நிலா பாப்பாவை காப்பாற்றி வீட்டிற்கு கூட்டி வரும் ஒரு மனிதர் போல இந்த நாடகத்தில் என்ட்ரி கொடுக்கிறார்.ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த க்யூட்டான நடிகரான சித்தார்த் ஏன் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு வந்துவிட்டார் என அனைத்து ரசிகர்களும் குழம்பிப் போயிருந்தனர்.

ஆனால் அவர் நிரந்தரமாக சீரியலில் நடிக்க வரவில்லை. அவரின் சித்தா பட ப்ரமோஷன் காகத்தான் நாடகத்தில் கெஸ்ட் ரோலாக என்ட்ரி கொடுத்துள்ளார். சித்தார்த் நாடகத்திற்கு வந்து விட்டார் என்பதிலேயே வாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி இல் முதலிடம் பிடித்து விட்டது.
மேலும் படிக்க : தாலி கட்டியதும் கோபியை அம்போன்னு நடுரோட்டில் விட்ட ராதிகா