இந்த பொருட்கள் கனவில் வந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்..
ஒரு மனிதனுக்கு நிஜ உலகம் உள்ளது போல் கனவு உலகமும் உள்ளது அதில் சிலது உண்மையாக இருக்கும் சிலது நீங்கள் அதிகமாக சிந்தித்த விஷயமாக இருக்கும் நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ எதன் மீது ஆசைப்பட்டீர்களோ எதைப் பற்றியே அதிகமாக நினைக்கிறீர்களோ அதுவே சில நேரம் கனவாக உங்களுக்கு ஆனால் வெறும் நீங்கள் பார்க்கும் விஷயங்கள் மட்டும் உங்கள் கனவில் வராது ஒரு சில கனவுகள் உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் கனவாக அமையும் .. ஆம் கனவு உலகிலும் பல கட்டமைப்புகள் உள்ளது அதன்படி நமது சாஸ்திர ப்படி சில பொருட்கள் நம் கனவில் வந்தால் அவை நமக்கு நன்மை பயக்கும் ஆனால் பல பொருட்கள் உங்கள் கனவில் வரும் பொழுது தீமையை தேடித் தரும் ஏதோ ஒன்று உங்களுக்கு நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் கனவாக கூட இருக்கும். தீமை என்று ஒன்று இருந்தால் நன்மை என்ற விஷயமும் கூடவே இருக்கும் அப்படிப்பட்ட நல்ல விஷயங்களை இப்போது பார்க்கலாம் எந்தெந்த பொருள் வந்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்..

பாம்பு
பாம்பை பார்த்தால் படையே நடுங்கும். பின்பு கனவில் பார்த்தால் மட்டும் என்ன கொஞ்சவா போகிறோம் பாம்பு நம் கனவில் வந்தால் ஏதோ ஆபத்து நம்மை நெருங்கி வர போகிறது என்று நாம் அனைவரும் அஞ்சி இருப்போம் ஆனால் அது உண்மை அல்ல பாம்பு உங்கள் பணப்பெட்டியின் அருகில் வருவது போல் நீங்கள் பார்த்தால் பணம் உங்களை தேடி வர போகிறது என்று அர்த்தமாகும். செலவுகள் குறைந்து வரவுகள் நீடிக்கும்.
மோதிரம்
கனவு உலக சாத்திரப்படி கனவில் மோதிரம் தென்பட்டால் லஷ்மி கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். மோதிரம் கனவில் வருவது மங்களகரமான விஷயமாக கனவு சாஸ்திரம் கூறுகிறது எனவே லட்சுமியின் பரிபூரண அருளால் செல்வம் பெருகும் குடும்பத்தில் மங்கள விஷயங்கள் அதிகமாக நடைபெறும்.
பால்
இறைவனுக்கு அபிஷேக பொருளாக செல்லும் பால் உங்களுக்கு கனவில் தோன்றினால் அந்த இறைவனை உங்களுடன் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தருவார் என்று அர்த்தம் பணவரவுகள் அதிகரிக்கும் வண்ணம் உங்களுக்கு இறைவன் அருள் புரிவார் அதிர்ஷ்டத்தால் தொட்டவை தொடங்கும்.

விளக்கு
உங்கள் கனவில் தீபம் எறிவது போல் கனவு கண்டால் செல்வ வளத்துடன் மிகுந்த பணக்காரர்களாக நீங்கள் வாழ போகிறீர்கள் என்று அர்த்தம். கோடிஸ்வர யோகம் உங்களை தேடி வருவதற்கான அறிகுறியாக தான் தீபம் உங்கள் கனவில் தோன்றுகிறது.
ரோஸ் மற்றும் தாமரை
ரோஸ் மற்றும் தாமரை மலர்கள் உங்கள் கனவில் தோன்றினால் லஷ்மி தேவி தாயாரின் செல்வ யோகம் உங்களுக்கு கிடைக்கப் போவதாக அர்த்தம் பணமழை பொழிய போகும் நேரத்தை உங்களுக்கு காட்டுவதற்காக இவை கனவில் தோன்றுகிறது. ஏனென்றால் ரோஸ் மற்றும் தாமரை ஆகிய இரண்டுமே லஷ்மி தேவிக்கு உரிய மலர்களாகும்.
மேலும் படிக்க : கனவு காண கற்றுக்கொடுத்த கலாம் பிறந்த தினம்!
காதணி
காதலியை அணிவது போல் உங்கள் கனவில் தோன்றினால்பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்பை பெற போகிறீர்கள் என்று அர்த்தம் எனவே வரப்போகும் எந்த வாய்ப்பையும் அனுபவிடாமல் அதனை விவேகமாக சிந்தித்து பயன்படுத்தி கோடீஸ்வர யோகத்தை பெறுங்கள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை போல் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை பெறும் பொழுது அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு பல பொருட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக அமையும் எனவே நீங்கள் கனவில் வரும் அனைத்தும் தேவைக்கே என்று எண்ணாமல் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து மகிழ்வான வாழ்வை வாழுங்கள். உங்களின் கனவுகள் நனவாக எங்களின் வாழ்த்துக்கள்…