TMB தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து (TMB) General Manager (Credit) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சற்று முன் வெளியானது. TMB வங்கி வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் | தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி |
பணியின் பெயர் | General Manager |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:
General Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TMB வங்கி வயது வரம்பு:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 31-03-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்
தகுதி விவரங்கள்:
பொது/தனியார் துறையின் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளில் உள்ள DGMகள் / GMகள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் நேரடி / வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலின் முறை, தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 31.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- விண்ணப்பதாரர் முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.tmbnet.in ஐப் பார்வையிட வேண்டும்.
- TMB வங்கி வேலைகள் அல்லது சமீபத்திய செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.
- மேனேஜிங் டைரக்டர் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.
- General Manager பணிக்கு விண்ணப்பிப்பதற்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
- TMB வங்கி ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பைக் கண்டறியவும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்
- களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.