காரைக்கால் மக்களின் காலைவாரும் காலரா
19ஆம் நூற்றாண்டில் உலகை ஆட்டி படைத்த ஒரு நோயாக இருந்தது. உலக மக்களை தனது பிடியில் வைத்து கோரதாண்டவம் ஆடி மக்களின் உயிரை குடித்து உலக வரலாற்றில் “உலக பரவுநோய்” என்ற பெயர் மற்றும் இன்று அதனை நினைத்தால் கூட மக்களை கதிகலங்க வைக்கும் அளவிற்கு மக்களின் உயிரை பறித்து அனைவரையும் சித்திரவதை செய்தது. 19ஆம் நூற்றாண்டில் பரவிய காலரா நோயால் இந்தியாவில் மட்டும் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட கொடூர நோயை ஒரு வழியாக கற்றுக்கொள் கொண்டு வந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அது தலையெடுக்க தொடங்கி உள்ளது.

காலராவின் அறிகுறிகள்
விபிரியோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் காலரா நோயானது செரிமான பாதையில் ஏற்படும் ஒரு நோய்த்தொற்றாகும். இதன் அறிகுறிகளாவன, நீர்க்க மலம் கழித்தல் உடனான வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி, நீச்சத்து குறைவு, வலிப்பு நோய்கள் ஆகியவை ஏற்படும்.
காரைக்காலில் காலரா
காரைக்காலில் காலரா நோய் தற்போது அதிகமாக பரவி வருகிறது. இதனால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மன்சூர் அலி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். காலரா நோய் காரைக்காலில் இரண்டு உயிர்களை காவு வாங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த வீதியில் உள்ளனர் எப்போது என்ன நடக்குமோ என்று அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் சுகாதாரமற்ற குடிநீர், தரம் இல்லாத உணவு ஆகியவற்றால் காலரா நோய் பரவி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் உணவகங்கள் குடிநீர் தொட்டி ஆகியவைகளை தரவாக சோதனை செய்து வருகின்றனர். தரம் இல்லாத உணவை அப்பொழுது அடித்து கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

மக்கள் அனைவரும் கவனமாகவும் சுகாதாரமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் முடிந்தவரை உங்களால் அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எப்பொழுதும் கவனத்துடன் செயல்பட்டு சுகாதாரத்தை பேணிக்காத்து நோய்களிலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கை வாழ அரசிற்கு நீங்களும் முடிந்த உதவியை செய்யுங்கள்…