தங்கம்போல் முகம் பொலிவு பெற இது போதுமா?????
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். முகப்பொலிவு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிக அவசியம் பஸ்ட் இம்பிரஷன் இஸ் தே பெஸ்ட் இம்பிரஷன் அதற்கு நாம் நம்மை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள அனைவரும் ஆசைப்படுவோம் .

ஆனால் இன்றைய காலத்தில் வாகனப்புகை, வேலைப்பளு என்ற காரணத்தினால் ஆசை வெறும் ஆசையாகவே போய்விடுகிறது. எனவே உங்கள் ஆசையை நிறைவேற்ற இது உங்களுக்கு ஒரு நல்ல தீர்வக அமையும்…
ஒரு வாரத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய உணவு முறைகளை பார்ப்போம்.
1 பீட்ரூட் , 1 ஆப்பிள் , இஞ்சி சிறிதளவு , புதினா ,2 கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து அந்த சாற்றை வாரத்தில் இரண்டு முறை பருக வேண்டும்.

பசலைக்கீரை சிறிதளவு , 1 கிரீன் ஆப்பிள், புதினா, 1/2 வெள்ளரி ஆகியவை எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து அந்த சாற்றை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பருக வேண்டும்.

இதனை தொடர்ந்து கடை பிடித்து வர கூடிய விரைவில் உங்கள் முகம் பொலிவு பெறுவதை உணர முடியும்…. சாப்பிடும் அளவு சிறியதாக இருந்தாலும் அதை எவ்வளவு ஆரோக்கியம் என்பது மிக முக்கியம்.. சத்தான உணவு முறையை பின்பற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்…