அழகழகாகிறது தொடுகிறது.. கருப்பன் படம்
கருப்பன் என்பது 2017 ல் திரையிடப்பட்ட அதிரடி மற்றும் நகைச்சுவை நிறைந்த திரைப்படம். இத்திரைப்படம் ரா . பன்னீர்செல்வத்தால் எழுதப்பட்டது மற்றும் இயக்கப்பட்டது. திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் தன்யா இரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் இதன் இசையமைப்பாளர் டி. இமான்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே
அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
மேலும் படிக்க ; பிக்பாஸில் அடுத்து என்ன தகவல்கள்
வெண்ணிலா என்பது வானை நீங்கிட
ஏங்கிடுமோ
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமா
யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே
அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து
அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது
உண்மையிலே
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ
கைகளிலே
தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெ தானே
யாருமே உருவானோம்
மனம்போல் வாழ
உறவே ஊஞ்சல் கயிறாக
அசையும் உயிரே
அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ