திமுக கூட்டணியில் பதவிகள் ஒதுக்கீடு அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் பதவியேற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுகீடு தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர், சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

