இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.

இன்றைய பஞ்சாங்கம்:
19 பிப்ரவரி மாதம் 2022 பிலவ வருடம் சனிக்கிழமை மாசி 7
தேய்பிறை
திதி : இன்று இரவு 10.47 மணி வரை திரிதியை அதன் பின்னர் சதுர்த்தி திதி
நட்சத்திரம் : இன்று மாலை 05.43 மணி வரை உத்திரம் நட்சத்திரம் அதன் பின் அஸ்தம் நட்சத்திரம்
யோகம் – மரண யோகம்
சந்திராஷ்டம ராசி : அவிட்டம், சதயம்
இன்றைய நல்ல நேரம் காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை
இராகு காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை
இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை
இரவு : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை
இரவு : 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம்:- கிழக்கு
பரிகாரம் : தயிர்
இன்றைய ராசிபலன்:
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்கள்வெற்றி காண்பார்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். தொழில் முயற்சிகள் வெற்றியடையும் புதிய தொழில் வாய்ப்புகள் காண பெறுவீர்கள்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பெண்களுக்கு முன்னேற்றமான நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் பொருளாதார பற்றாக்குறைகள் சீர்செய்யப்படும்.
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் தன வரவு உண்டாகும் குடும்பத்தில் அமைதி தவழும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும் உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும் எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள்.
எதிர்பாராத தனவரவு உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும் தாங்கள் ஈடுபட்டிருக்கின்ற ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு இடம் மாறுவதற்கான முயற்சிகள் வெற்றியடையும்.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள் நிரந்தர குடியுரிமை மற்றும் கிரீன் கார்டு போன்ற காரியங்களை துவக்குவதற்கு இன்று நல்ல நாள் ஆகும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாளாகும் வெற்றிகரமாக தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள் கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள் கல்விக்காக சிலருக்கு இடம் விட்டு இடம் மாறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் மாணவர்களுக்கு கல்வியை கூடுதல் கவனம் தேவைப்படும் உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு செலவினங்களை சற்று கூடுதலாக வாய்ப்புண்டு இருப்பினும் கல்வியில் வெற்றியைக் காண்பார்கள்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
அன்பர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. தனவரவு உண்டாகும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றியடைய கடின முயற்சி தேவைப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு இரு நாட்கள் தள்ளிப்போடவும்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு சற்று காலதாமதம் ஆனாலும் நல்ல முடிவுகள் கிடைக்கும் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சதை அதிகமாவதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிர்ப்பீர்கள்.