தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா..!
தமிழகத்தில் கடந்த கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களில் தொற்று குறைவாகவே பதிவாகியுள்ளது சற்று ஆறுதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று (05-02-2022) நேற்று 7,524 ஆக இருந்த நிலையில், இன்று 6,120 பேருக்கு மட்டுமே தொற்ரு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து
23,144 பேர் குணமடைந்துள்ளதாகவும், 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பதிவான கொரோன வழக்குகள் தேதி வாரியாக,06 பிப்ரவரி 6,120 பேர், 05பிப்ரவரி: 7,524 பேர், 04பிப்ரவரி: 9,916 பேர், 03பிப்ரவரி: 11,993 பேர், 02பிப்ரவரி: 14,013 பேர், 01பிப்ரவரி: 16,096
31 ஜனவரி: 19,280 பேர், 30 ஜனவரி: 22,238 பேர், 29ஜனவரி: 24,418 பேர், 28 ஜனவரி: 26,533 பேர், 27Jஜனவரி: 28,515 ஆகிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில்,- 972 பேருக்கும், கோவையில், – 911, செங்கல்பட்டு- 531,திருப்பூர் – 473, ஈரோடு – 397 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.