தமிழக மாவட்டங்களை தாக்கும் இடி மின்னல் மழை!!!!!!
ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னல் மழை தாக்க உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி ,தமிழ்நாட்டில் ஆயுத பூஜை தொடங்கும் இந்த காலகட்டத்தில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது என அறிவித்து இருக்கின்றது .தமிழ்நாட்டில் லேசானது முதல் மழை பெய்ய வாய்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது .தென்மேற்கு பருவக்காற்று வெப்ப சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டின் வடக்கு பகுதி கடலோர மாவட்டங்கள் அதிக மழை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளான நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி,திண்டுக்கல் மாவட்டங்களும் அதிக அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வெப்பநிலை 33 டிகிரி வரை இருக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன

அரபிக்கடல் பகுதியில் சூறாவளியா!..

அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருத்தல் நலம். வீட்டைச்சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்தல் வேண்டும். அத்துடன் ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பொருட்களை முன்னமே வாங்கி வைத்துக் கொள்ளுதல் சிறப்பு தரும். பண்டிகை நேரத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.