இன்றைய பஞ்சாங்கமும் இராசி பலனும்
தினமும் காலையில் நீராடிவிட்டு சூரிய பகவானின் மந்திரங்களை சொல்லி வர உள்ளம் புத்துணர்ச்சி பெறும் நமது உடல் பெரும் பலத்தை பெறுவதோடு பல நோய்களும் நீங்கும்
சூரிய பகவானின் மந்திரம்
“காசினி இருளை நீக்கும் கதிரொளியாக எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி “
தினமும் காலையில் இம் மந்திரத்தை கூறி சூரியபகவானை வணங்கி அவரின் அருளைப் பெறுக…

இன்றைய (03-09-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம்
03.10.2021*புரட்டாசி 17*ஞாயிற்றுக்கிழமை*
துவாதசி இரவு 10.30 வரை பின்பு தேய்பிறை திரியோதசி.
நட்சத்திரம்- மகம் பின்இரவு 03.26 வரை பின்பு பூரம்.
யோகம்- மரணயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசிப்பலன் – 03.10.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும்.பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும்.வியாபாரத்தில் உள்ள மந்த நிலை நீங்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை அடையலாம்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த வேலையிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மேலும் படிக்க ;விளக்கேற்றும் முறைகள் அவற்றின் பலன்கள் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் கிட்டும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
கும்பம்
உங்களின் ராசிக்கு எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய பொருட்கள் சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.