இள வயதிலேயே வயதிற்கு வந்தால்…?
சமுதாயத்தின் கோட்பாடு:

தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடையாதீர். இந்த பதிவில் ‘வயதிற்கு வருவது’ என்பது பக்குவத்தை குறிக்கும். உதாரணமாக சிறு வயதிலேயே பெரும் மனிதர்கள் போல் நடந்து கொள்வது, அறிவுத்திறன் , ஆன்மீகம், நுண்ணறிவு, வாழ்க்கை பக்குவம் போன்ற விசயங்கள் அந்தந்த வயதில் அதற்க்கேற்ற பக்குவம் வரவேண்டும் என்று இந்த சமுதாயம் விதித்திருக்கும்.
நீங்கள் வித்தியாசமாகவே தெரிவீர்கள்:

இந்த கோட்பாடுகளுக்கு இணங்காமல் சில குழந்தைகள் இயற்கை விதியின்படி சற்று முன்கூட்டியே பக்கவத்தை அடைந்திருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளால் இந்த சமுதாயத்தோடு ஒத்து வாழ்வது என்பது சற்று கடினமாகவே இருக்கும். கடினமே தவிர இயலாத செயல் அல்ல.
உறவுகளில் விரிசல்:

இப்படிப்பட்ட மனிதர்களால் உறவுகளோடு இயல்பாக மற்றும் அன்பு காட்டும் செயல்களில் ஈடுபட முடியாது. ஏனெனில் முதலில் இவர்களை புரிந்துகொள்வது என்பது அவர்களின் உறவினர்களுக்கு சற்று கடினமானதே, மற்றும் இவ்வகை குழந்தைகள் அன்பு காட்ட எண்ணினாலும் அவர்களது உறவினர்கள் இந்த குழந்தையின் ஆற்றல்களை பயன்படுத்தவே முற்படுவார்களே தவிர, தூய அன்பினை எதிர்பார்க்க இயலாது.
சரியான தீனி தேவை

இப்படிப்பட்ட குழந்தைகள் சமுதாயத்தினராலும், அரசாங்கத்தினராலும், அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் அமைத்து கொடுத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய அளவான மாற்றங்களை நிகழ்த்த முடியும்.
கர்வம் கூடாது!

இப்படி முன்கூட்டியே பக்குவத்தை அடைந்த பிள்ளைகள் சற்று பொறுப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு வயதில், பலரும் நம்மை பார்த்து வியப்படைகின்றனர் என்ற காரணத்தினால் கர்வம் கொண்டு காணாமல் போன மனிதர்கள் பலர். எனவே இப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிந்தால், அவர்களுக்கான வழிகாட்டுதலும், அவர்களின் இயல்பு நிலை மாறாமல் அவர்களின் கண்டுபிடிப்புகளை இந்த சமுதாயத்திற்கு வழங்க ஏற்ற முயற்சிகளை எடுப்பது நம் கடமை. இவ்வாறான கண்டுபிடிப்புகளை கொடுத்த மனிதர்களே வரலாற்றில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இளைப்பாறும் ஞாயிற்றுக் கிழமையில் என்ன விசேஷம்